VIDEO: என்னதான் ‘Photoshoot’-அ இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.. கல்யாணம் ஆன அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு வந்த ‘அதிர்ச்சி’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமண நாளன்று வித்தியாசமாக நடத்திய போட்டோஷூட்டால் மணப்பெண் சிக்கலில் சிக்கிய சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது.

VIDEO: என்னதான் ‘Photoshoot’-அ இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.. கல்யாணம் ஆன அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு வந்த ‘அதிர்ச்சி’ தகவல்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போஷாரி (Bhosari) பகுதியைச் சேர்ந்தவர் சுபாங்கி சாந்தாராம் ஜரண்டே. 23 வயதான இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. அதற்காக திருமண நாளன்று போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த நாள் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது.

Bride booked for violating COVID-19 norms in Pune

திருமணத்துக்காக வீட்டில் இருந்து மண்டபத்துக்கு வரும் வழியில், காரின் பேனட்டில் அமர வைத்து மணப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். மேலும் அதனை வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், மணப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Bride booked for violating COVID-19 norms in Pune

இதுகுறித்து தெரிவித்த போலீசார், ஐபிசி மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர், வீடியோ எடுத்தவர் மற்றும் கார் ஓட்டுநர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் வாகன ஸ்டண்ட் செய்தல், தவறு செய்ய தூண்டுதல், ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

ஆபத்தை விளைவிக்கும் வகையில் பயணம் மேற்கொள்வது, பொது சாலையில் ஸ்டண்ட் செய்வது போன்ற செயல்கள் இந்தியாவில் தண்டனைகுரிய செயலாகும். இத்தகைய செயலில் ஈடுபட்டதால்தான், மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் மணப்பெண் முகக்கவசம் அணியாமல் இருந்ததற்காக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த வழக்கு தொடர்பாக இன்னும் யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். விதிகளை மீறி போட்டோஷூட் நடத்திய மணப்பெண் மீது, திருமணம் ஆன அடுத்த நாளே வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்