யாரை முதல்ல போட்டோ எடுக்குறது?.. மாப்பிள்ளை - பெண் வீட்டார் இடையே வந்த தகராறு.. களேபரமான கல்யாண வீடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேச மாநிலத்தில் கல்யாணத்தன்று யாரை முதலில் புகைப்படம் எடுப்பது என மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டினர் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | "தம்பி நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்".. எலான் மஸ்க்குக்கே Tough கொடுத்த மாணவர்.. மஸ்க்கின் அதிரடி..!
உத்திர பிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அருகில் உள்ள மாதவ்பூரில் திருமணம் நடத்த இருவீட்டினரும் சம்மதித்திருக்கின்றனர். தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
திருமணத்தின் போது, மணமகளின் வீட்டினர் சிலர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, புகைப்படங்கள் எடுக்கப்பட்டிக்கின்றன. இதனால் மணமக்கள் தயாராகி நின்ற நிலையில் யார் முதலில் புகைப்படம் எடுப்பது என மணமகள் - மணமகன் வீட்டினர் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, இதுகுறித்து இருவீட்டினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. இதனால் மணப்பெண்ணின் சகோதரி உள்ளிட்ட பலருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து கல்யாணம் நடைபெற்ற இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் இருவீட்டினரையும் சமாதானப்படுத்தி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சதர் மருத்துவமனையில் சிகிசசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி பல்ராம் சிங்,"வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் திருமண விழாவில் புகைப்படம் எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. ஒரு குழுவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.
திருமண வீட்டில் யாரை முதலில் புகைப்படம் எடுப்பது என மணமகன் - மணப்பெண் வீட்டினரிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | எப்புட்றா.. ஒரே பந்துல 7 ரன்கள்.. இந்தியா- வங்கதேச டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்.. வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சாலையில் கிடந்த மர்ம பொருள்.. குண்டுன்னு நெனச்சு தெறிச்சு ஓடிய கிராம மக்கள்.. செக் பண்ணிட்டு போலீஸ் சொன்ன விஷயம்..
- மனைவியை கொலை செஞ்சதா கணவர் கைது.. 6 வருஷத்துக்கு அப்புறம் இரண்டாவது கணவருடன் சிக்கிய பெண்.. வழக்கில் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்..!
- விடிஞ்சா கல்யாணம்.. நைட்டு மணப்பெண் எடுத்த விபரீத முடிவு.. உறைந்துபோன குடும்பத்தினர்..!
- க்யூட்டா போஸ் கொடுத்துட்டு இருந்த புதுமண ஜோடி.. திடீர்ன்னு பின்னாடி நின்ன யானை செஞ்ச காரியம்.. "ஆத்தாடி, ஜஸ்ட் மிஸ்ஸு"!!
- சொதப்பிய மேக்கப்.. கடுப்பான கல்யாண பெண் செஞ்ச காரியம்.. பரபரப்பான கல்யாண வீடு..!
- "கல்யாணமாகி 3 நாள் தான்".. காரை வழிமறித்த பைக்.. அரண்டு போன மாப்பிள்ளை.. அடுத்த நிமிஷமே புது பெண் செஞ்ச அதிர்ச்சி விஷயம்!!
- கல்யாண ஊர்வலத்தை நிறுத்திட்டு போராட்டத்திற்கு சென்ற மணமகன்.. அங்க இருந்தவங்களே ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டாங்க.. வைரல் பின்னணி..!
- "சபாஷ் மாப்பிள சபாஷ்"... 11 லட்ச ரூபாய் வரதட்சணையை அப்படியே திருப்பி கொடுத்த மணமகன்.. மனம் நெகிழ்ந்த நெட்டிசன்கள்!!
- "உங்க ஊருக்கு பொண்ணே தர மாட்டோம்".. ஒரு வருசமா No கல்யாணம்.. 'ஈ'க்களால் தூக்கம் தொலைத்த கிராமம்..
- கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் காதலனுடன் கண்டுபிடிப்பு.. 7 வருஷம் கழிச்சு வழக்கில் வந்த திடீர் திருப்பம்..!