'இப்போதைக்கு வேண்டாம்'... 'இந்தியாவின் ‘கோவேக்சின்’ தடுப்பூசி கொள்முதலை நிறுத்திய பிரேசில்'... பின்னணி காரணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவதற்காகப் பிரேசில் அரசு கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் பிரேசில் நாட்டின் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசிக்கான இறக்குமதி கோரிக்கைகளை மறுத்தது.
விரிவான ஆய்வுக்கு பிறகே பிரேசிலில் தடுப்பூசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்ற சூழல் உருவானது. இதன் காரணமாக ஒப்பந்தத்தின்படி, தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பப்படவில்லை. இதற்கிடையில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஏற்கனவே அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக அவர் மீது கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அவருக்கு எதிரான முறைகேடு புகார் குறித்த விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில், கோவேக்சின் 20 கோடி டோஸ்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகப் பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ கெய்ரோகா அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி... உச்சகட்ட எதிர்பார்ப்பு!.. பாரத் பயோடெக் நிறுவனத்துடன்... முதல்வர் ஸ்டாலின் அவசர மீட்டிங்!
- கொரோனா தடுப்பூசி ‘வெவ்வேறு’ டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் அச்சம்..? இந்தியாவின் கோவிட்-19 தலைமை ஆலோசகர் விளக்கம்..!
- தடுப்பூசி பாதுகாப்பானாது: கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் சிலருக்கு மட்டுமே மீண்டும் நோய் தொற்று - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) விளக்கம்..!
- கொரோனா தடுப்பூசி செலுத்தியதும் ‘பிரதமர்’ என்னிடம் கேட்ட கேள்வி.. புதுச்சேரி செவிலியர் பகிர்ந்த அனுபவம்..!
- "முதல் ஆளா நான் தான் போட்டுக்கிறேன்!".. 'சந்தோஷமா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி முடிவு!'.. பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்!
- இந்தியாவின் 'கோவாக்சின்' தடுப்பு மருந்து எப்போது தயாராகும்?,,.. வெளியான லேட்டஸ்ட் 'அப்டேட்'!!!
- 'இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ள முதல் தடுப்பூசி'... 'தற்போதைய நிலவரம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்!'...
- 'என்னாச்சு? எல்லாம் நல்லா தான போயிட்டிருந்தது!.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல!'.. பாரத் பயோடெக் 'அதிர்ச்சி' தகவல்!
- 'இந்தியாவில் தயாராகும் 3 தடுப்பு மருந்துகள்'... 'தற்போதைய நிலை என்ன?'... 'ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்'...
- இந்தியாவின் COVAXIN!.. வெற்றிகரமாக டெல்லி நபருக்கு செலுத்தி முதல் பரிசோதனை!.. எய்ம்ஸ் மருத்துவர்கள் பெருமிதம்!