முன்னாள் காதலிக்கு காதலன் உருவாக்கிய பேக் ஐடி.. நண்பரை வைத்து காதலி செய்த சதி திட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா: போலியான இன்ஸ்டா ஐடி மூலம் முன்னாள் காதலிக்கு தொல்லை கொடுத்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
>
Advertising

காதல் தான் உலகின் மிகப் பொதுவானதும் மிக சிக்கலானதுமாக மனித குலம் தோன்றியதிலிருந்தே இருக்கிறது.  நாளுக்கு காதல் என்ற பெயரில் கொலைகள், கொலை மிரட்டல்கள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  காதலித்த பெண் தன்னை தவிர்த்ததால் அவளது கல்லூரி வாசலில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யும் இளைஞன். காதலை ஏற்காவிட்டால் இன்றும் ஆசிட் அடிக்கிறார்கள்.

தற்போது காதலியை பழிவாங்குவது நவீனமயமாக்கப்பட்டு வருவது வேதனைதான். பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிடுவது இன்னும் வன்மத்தை வளர்த்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 28 வயது இளைஞர் தனது முன்னாள் காதலியை பழிவாங்க செய்த செயல் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பந்தம் செய்யப்பட்ட அரசுப்பணியில் வேலை செய்து வந்த பெண், கடந்த ஆண்டு காதலன் தன்னை சந்தேகிப்பதால் அவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் அவரை பழிவாங்க துடித்த காதலன், முன்னாள் காதலியின் பெயரில் அவப்பெயரை ஏற்படுத்த திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி இன்ஸ்டாகிராமில் அப்பெண்ணின் நண்பரின் பெயரில் போலி ஐடியை கிரியேட் செய்து அதில் முன்னாள் காதலிக்கு ஆபாச குறுஞ்செய்திகளும், தகவல்களும் வீடியோக்களும் அனுப்பி வந்துள்ளார்.

இதன் மூலம் அந்த நபருடன் ஒப்பிட்டு தனது காதலிக்கு அவப்பெயரை சித்தரித்து விடலாம் என்பதே இவரது திட்டமாக இருந்துள்ளது. இந்நிலையில், அப்பெண்ணின் நண்பரின் பெயரில் போலி இன்ஸ்டா ஐடி இருப்பதை கண்டறிந்த அப்பெண்  இதனை உடனடியாக தனது ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அந்த நபர் புகாரளித்தார்.  புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணையில்,  சமூகவலைதளத்திலிருக்கும் தொடர்புடைய தகவல்களின் அடிப்படையில் இதனை செய்தது 28 வயது இளைஞர் என்றும் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலன் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, IPC பிரிவுகள் 419 (ஆள்மாறாட்டம்), 500 (அவதூறு) மற்றும் 66 C (கணினி ஆதாரங்களைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்தல்)  67 (மின்னணு வடிவத்தில் ஆபாசமான செய்திகளை அனுப்புதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

MAHARASHTRA, CYBER CRIME POLICE, LOVERS, EX LOVER, EX GIRLFRIEND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்