'இந்த விண்டோஸை உடைச்சிட்டா'... 'Microsoft-க்கு பெருகும் ஆதரவு'... அப்படி என்ன சொன்னார் நாதெல்லா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் பிறந்த சத்யா நாதெல்லா இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். Buzzfeed News என்னும் செய்தி இணையதள ஆசிரியரான பென் ஸ்மித் சத்யா நாதெல்லா உடன் நடந்த நேர்காணல் குறித்து தற்போது மனம்திறந்துள்ளார். அதில் பென் ஸ்மித் சத்யா நாதெல்லாவிடம், குடியுரிமைச் சட்டம் குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர் அளித்த பதில் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

சத்யா நாதெல்லா குடியுரிமை சட்டம் குறித்து கூறும்போது, ''தற்போது நடக்கும் சம்பவங்கள் பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றன. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் நாளை இந்தியாவில் மற்றொரு யுனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கலாம் அல்லது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆகப் பதவி ஏற்கலாம்'' என குறிப்பிட்டதாக பென் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

நாதெல்லாவின் இந்த பதில் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. நாதெல்லாவின் வெளிப்படையான பேச்சு பலரையும் கவர்ந்தது. இந்த சூழ்நிலையில் சிலர் நாதெல்லாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதன் காரணமாக #BoycottWindows என்ற ஹேஷ்டேக் மூலம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது போன்ற மனநிலை தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இது ஆபத்தான ஒன்று எனவும் புற்றுநோய் போன்றது எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

TWITTER, MICROSOFT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்