‘ஸ்கூல் நோட் புக்கிலிருந்து’... ‘பேப்பரை கிழித்து’... ‘புகார் கொடுத்த 10 வயது சிறுவன்’... 'பாராட்டுகளை அள்ளிய போலீசார்'... வைரலான போட்டோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன், தனது நோட்புக்கிலிருந்து பேப்பரை கிழித்து காவலல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளநிலையில், அதை 2 நாளில் முடித்துக்கொடுத்து அனைவரது பாராட்டையும் பேலீசார் பெற்றுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மேப்பையூர் காவல்நிலையத்திற்கு வித்தியாசமான புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது, அந்த காவல்நிலையத்திற்கு வந்த 5-ம் வகுப்பு படிக்கும் அபின் என்ற சிறுவன், தனது பள்ளி நோட் புத்தகத்திலிருந்து கிழித்த பேப்பரில், புகார் ஒன்றை எழுதி வந்து கொடுத்துள்ளான். அதில், 'கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நானும், எனது தம்பியும், எங்களுடைய சைக்கிளை பழுது பார்த்து தருமாறு, சைக்கிள் கடையில் விட்டிருந்தோம்.
இதற்கு முன் பணமாக 200 ரூபாயும் கொடுத்தோம். ஆனால், குறிப்பிட்ட தேதியில் சைக்கிள் வராததால், கடைக்காரருக்கு ஃபோன் செய்தோம். ஆனால் அவர் ஃபோனை எடுக்கவில்லை. அப்படியே எடுத்தாலும் விரைவில் கொடுத்துவிடுகிறேன் என்று பதில் கூறினார். நேரடியாகக் கடைக்குச் சென்றாலும் கடை எப்போதும் பூட்டியே உள்ளது. இப்படியே 2 மாதகாலம் ஆகிவிட்டது. எங்களது வீட்டில் இதைப் பற்றி விசாரிக்க யாரும் இல்லை. அதனால் நீங்கள் தலையிட்டு, எங்களது சைக்கிளை பெற்றுத்தர வேண்டும்’ என்று எழுதியிருந்தான்.
மற்றவர்கள் பார்வையில் இது சில்லியாக தெரிந்தாலும், முறையான புகார் கூட கொடுக்கவில்லை என்றாலும், சிறுவனின் நம்பிக்கையை கண்டு வியப்படைந்த போலீசார், உடனே அந்தக் கடைக்கு விரைந்து காலதாமதம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தனது மகனின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்ததாலும், இதனால் தனக்கு சற்று உடல்நிலை சரியில்லாததாலும் சைக்கிளை பழுது பார்த்து தர முடியவில்லை என்று கடைக்காரர் கூறினார்.
எனினும் போலீசாரின் தலையீட்டால் சைக்கிள் சரிசெய்யப்பட்டு, தாமதமின்றி 2 நாட்களில் சிறுவனிடம் சைக்கிள் ஒப்படைக்கப்பட்டது. இதை கேரளா போலீஸ் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ’புகார் தீர்த்து வைக்கப்பட்டது’ என்று போஸ்ட் செய்துள்ளனர். பதிலுக்கு அபினும் மகிழ்ச்சியோடு சைக்கிளுடன் புகைப்படம் எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சேட்டை செய்ததாகக் கூறி’... ‘பள்ளியில் கயிறால்’... ‘கட்டிவைக்கப்பட்ட 2 மாணவர்கள்’!
- ‘துண்டான கை’... ‘விரைந்து செயல்பட்ட பெற்றோர்’... ‘நம்பிக்கை கொடுத்த மருத்துவர்கள்’... ‘மீண்டும் இணைந்த சிறுவனின் கை’!
- ‘வீட்டு முன்பு விளையாடியபோது’... ‘4 வயது சிறுவனுக்கு’... ‘வேளச்சேரி அருகே நடந்த சோகம்’!
- ‘திருமணத்திற்கு’ செல்லும் வழியில்.. ‘எதிரே வந்த பைக்’.. ‘நொடியில்’ நடந்து முடிந்த ‘கோர விபத்து’..
- '6 மாத கர்ப்பிணியான காதலி'... ‘மனம் மாறிய இளைஞர்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'!
- ‘6 பைக், 1 சொகுசு கார் இருந்தும்’.. ‘விபரீதத்தில் முடிந்த தொழிலதிபர் மகனின் ஆசை’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘7 வயது சிறுவனைக் கடத்திய 10ஆம் வகுப்பு மாணவன்’.. ‘சென்று பார்த்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி’..
- ‘அசந்து தூங்கிய தாயின் அலட்சியத்தால்’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..
- ‘அடுக்குமாடி குடியிருப்பில்’... ‘கார் பார்க்கிங்கில் விளையாடிய’... ‘7 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த கொடூரம்'... பதறவைத்த வீடியோ!
- ‘எல்லா ஐபிஎல் மேட்சுக்கு முன்னாடியும்’.. ‘இதை கண்டிப்பா செய்யணும்’.. ‘கங்குலி செய்வாரா?’...!