'திரண்டு வரும் வெள்ளத்தில் டிக்டாக்'.. 'இப்பதானே ஒருத்தர இழந்தோம்?'.. '20 அடி உயர பாலத்தில் இருந்து'.. பதறவைத்த இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகாரில் மழை வெளு வெளுவென வெளுத்ததில், ஆங்காங்கே வெள்ளக்காடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 

வெள்ளத்தில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்பவே சில நாட்கள் ஆகும் என்கிற நிலையில், இந்த வெள்ளத்திலும் டிக்டாக் மோகத்துக்கு அடிமையான இளைஞர் ஒருவர் பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து கீழே ஓடும் ஆற்றினை பார்த்துக் கொண்டிருக்கிறார். 

ஆனால் அங்கு ஓடிக் கொண்டிருக்கும் மஹாரோவர் ஆற்றிலோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், அந்த இளைஞர் கொஞ்சம் கொஞ்சமாக பாலத்தில் இருந்து தாண்டி அதன் கிடைமட்டக் கம்பிகளில் நடந்துவருகிறார். 

பின்னர், டிக்டாக் வீடியோவுக்கு தயாராக அங்கிருந்து ஆற்றில் குதிக்கிறார். அவருக்கு எதுவும் ஆகவில்லை என்றபோதிலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் தெலுங்கானாவில் தினேஷ் என்கிற வாலிபர் டிக்டாக் வீடியோவுக்காக முயற்சி செய்தபோது ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அந்த சுவடு கூட இன்னும் மக்கள் மனதில் இருந்து மறையாத சூழலில், வெள்ளம் சூழ்ந்திருக்கும் ஒரு மாநிலத்தில் இளைஞர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

RAIN, TIKTOK, VIDEO, ADDICTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்