‘பெருவெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்’... ‘பயமின்றி சிறுவன் செய்த செயல்‘...வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெருவெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி, ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு சிறுவன் ஒருவன் செய்த உதவி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் கனமழையால், வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கிருஷ்ணா ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக, யதுகிரி மற்றும் தேவ துர்கா இடையே உள்ள பாலம் தண்ணீரால் மூழ்கி உள்ளது. இதனால், அது சாலையா, பாலமா என்று அடையாளம் காண முடியாதநிலையில், வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஒன்று அந்த பாலத்தைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பாலத்தின் வழி எது என்று ஓட்டுநர் அடையாளம் காண இயலாமல் தடுமாறிய சூழலில், சிறுவனொருவன் துளியும் பயமின்றி பாலத்தை கடக்க ஆம்புலன்சிற்கு உதவியுள்ளான். அந்த சிறுவன் முன்னே ஓடோடி செல்ல, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சிறுவனின் வழிகாட்டுதலில், வாகனத்தை செலுத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BOY, KARNATAKA, AMBULANCE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்