அந்த ஒரு போன் கால்.. 30 ஆயிரம் அடியில் பதறிய பயணிகள்..விமானத்தின் திக் திக் நொடிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஈரானில் இருந்து சீனா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விமானம்
மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றான ஈரானில் இருந்து சீனாவுக்கு நேற்று ஒரு பயணிகள் விமானம் சென்றிருக்கிறது. அந்த விமானம் இந்திய வான் பரப்பில் நுழைந்த நேரத்தில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் விமானத்தை தரையிறக்க முடிவு செய்திருக்கிறார். ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து சீனா சென்ற இந்த விமானம் நேற்று காலை 9.20 மணியளவில் இந்திய வான்பரப்பிற்குள் நுழைந்தது. அப்போது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
மிரட்டல்
இதனையடுத்து விமானத்தை டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க விமானி அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இருப்பினும் ஜெய்ப்பூர், சண்டிகர் உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானத்தை தரையிறக்க விமானிக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அந்த விமானி இதனை ஏற்கவில்லை.
சீறிப்பாய்ந்த ராணுவ விமானங்கள்
இந்நிலையில், இந்திய ராணுவத்தின் விமானப்படைக்கு இதுகுறித்து தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக இந்திய விமானப்படையில் உள்ள சில விமானங்கள் அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானத்தை பின்தொடர்ந்தன. மேலும், அந்த விமானத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த இந்திய போர் விமானங்கள், அவ்விமானம் இந்திய வான்பரப்பை கடக்கும் வரையில் பாதுகாப்பும் அளித்திருக்கின்றன. அதன்பின்னர் அந்த விமானம் திட்டமிட்டபடி சீனாவில் உள்ள Guangzhou விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிவிப்பில்,"அனைத்து நடவடிக்கைகளும் வகுக்கப்பட்ட நடைமுறையின்படி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் (BCAS) ஆகியவற்றுடன் இணைந்து எடுக்கப்பட்டது. விமானம் இந்திய வான்பரப்பில் இருந்த நேரம் முழுவதும் விமானப்படையின் ரேடார் கண்காணிப்பில் இருந்தது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஏர்போர்ட்'ல வெச்சு கைதானாரா..? "எங்க தான் இருக்காரு சீன அதிபர்?".. உலகமே கூர்ந்து கவனித்த நிகழ்வு.. வெளிச்சத்துக்கு வந்த உண்மை??
- நிலநடுக்கத்தில் சிக்கி.. "17 நாளா ஆளையே காணோம்".. இறந்ததாக கருதப்பட்ட நபர்.. உயிருடன் திரும்பிய அதிசயம்.. "எப்படிங்க பொழச்சாரு??"
- க்ளோனிங் ஆராய்ச்சியில் சரித்திரம் படைத்த ஆராய்ச்சியாளர்கள்.. அவங்க தேர்ந்தெடுத்த விலங்கு தான் ஹைலைட்டான விஷயம்..!
- இனி விண்வெளிக்கே டூர் போகலாம்.. சீனா போட்ட பிளான்.. எல்லாம் சரி அந்த டிக்கெட் விலையை கேட்டா தான் தலை சுத்துது..!
- விண்வெளியில் விளைந்த அரிசி.. சாதித்து காட்டிய சீன விஞ்ஞானிகள்.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்!!
- திருமணத்துக்கு முன் நடந்த போட்டோஷூட்.. திடீர்னு பாய்ந்த மின்னல்.. கொஞ்ச நேரத்துல வெலவெலத்துப்போன மணமகள்.!
- சட்டுன்னு அதிகரித்த கொரோனா பாதிப்புகள்.. சீன அரசு எடுத்த முடிவு.. பரபரப்பான உலக நாடுகள்..!
- ஆபிஸ்ல Friendly-ஆ கட்டிப்பிடிக்கும்போது துடித்த பெண்.. வலி தாங்க முடியாம ஹாஸ்பிடல் போனப்போ தான் விபரம் தெரிஞ்சிருக்கு..!
- கல்யாணத்து அன்னைக்கி சந்திச்ச அவமானம்.. மறுநாளே வேலை'ய ராஜினாமா பண்ண மணப்பெண்.. "அப்படி என்னய்யா நடந்துச்சு??"
- சீனாவில் பரவும் புதிய வகை 'Langya' வைரஸ்..? - இதுவரை தொற்று பாதித்துள்ள விபரம்..!