ஒரே பெயரால் வந்த குழப்பம்.. வேறு நபரின் உடலை வாங்கிச்சென்ற உறவினர்.. கடைசி நேரத்துல மீசையை பார்த்ததும் எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெயர் குழப்பம் காரணமாக தவறான நபரின் உடலை வாங்கிச் சென்று இருக்கின்றனர் ஒரு குடும்பத்தினர். இந்த குழப்பத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்கிறது இறந்தவருடைய மீசை.

Advertising
>
Advertising

சிகிச்சை

மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் தாலுகாவில் உள்ள பெசாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்காந்த் பாட்டீல். இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்திருக்கிறது. 62 வயதான ராம்காந்த் பாட்டீல் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவர் மரணமடைந்திருக்கிறார். இதனை அடுத்து அவரது உடல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் பன்வெல் தாலுகாவின் தகிவாலி கிராமத்தைச் சேர்ந்த ராம் பாட்டீல் (வயது 66) என்பவர் சிறுநீரகம் மற்றும் குடல் பாதைகள் காரணமாக அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் ராம் பாட்டீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருடைய உடலும் அங்கிருந்த பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

மாறிப்போன உடல்கள்

இந்நிலையில் ராம் காந்த் பாட்டீலின் உறவினர்கள் அவருடைய உடலை தரும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கவே ஊழியர்கள் உடலை அளித்து இருக்கின்றனர். உடலை பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய ராம்காந்த் பாட்டீலின் உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்குகள் செய்த போது அவருடைய மீசை வித்தியாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அப்போதுதான் உடலே மாறிப் போய் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு படையெடுத்திருக்கின்றனர் ராம்காந்த் பாட்டீலின் உறவினர்கள். இது ஒரு புறம் இருக்க, ராம் பாட்டீலின் உறவினர்களும் மருத்துவமனையில் இதே சிக்கலுடன் நின்றிருந்தனர். அவர்களும் இறுதி சடங்கு செய்யும் வேளையில் உடல் மாறி இருப்பதைக் கண்டு திகைத்துப் போய் மருத்துவமனைக்கு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து இரு தரப்பினரும் உடலை மாற்றிக் கொண்டனர். இருப்பினும் உயிரிழந்த நபர்களின் உடல் மாறிய குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

உடல் வழங்கப்படுவதற்கு முன்பே உறவினர்களிடம் காட்டப்பட்டு ஒப்புதல் கையொப்பம் பெறப்பட்டிருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதனை அடுத்து தத்தமது உறவினரின் சடலத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தார் அதன் பிறகு இறுதி சடங்குகளை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

HOSPITAL, BODY SWAP, MOUSTACHE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்