'கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு புதிய பூஞ்சை நோய்'... 'இதன் அறிகுறி என்ன'?... மருத்துவர்கள் விரிவான விளக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இது ஒருபுறம் இருக்க கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களுக்கும், குணமடைந்து வருவோர்களுக்கும் ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 52 பேர் கருப்பு பூஞ்சை தொற்றிற்குப் பலியாகியுள்ளதாகத் தெரிவித்தார். அவர் கூறும் போது, ''மாநிலத்தில் 1500 பேருக்குக் கருப்பு பூஞ்சை தொற்று நோய் இருந்த நிலையில், அது இந்த இரண்டாவது அலையில் வேகமாகப் பரவுகிறது.

கொரோனா முதல் அலையின் போது இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் வெகு சிலரே உயிரிழந்திருந்தனர். ஆனால் இரண்டாவது அலையில் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது'' எனக் கூறியுள்ளார். இதன் அறிகுறிகளாக மருத்துவர்கள் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, நாசியில் பிரச்சினை உள்ளிட்டவை முன்வைக்கப்படுகின்றன. மேலும் மூக்கு, கண்கள் வழியாகப் பரவும் இந்த தொற்று நோய் நேரடியாக மூளையைப் பாதிக்கிறது'' என மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கருப்பு பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 8 நோயாளிகள் தங்களது ஒரு கண் பார்வையை இழந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஒரு லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்தை வாங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்