வந்தது ‘கருப்பு பூஞ்சை’ நோய்க்கு மருந்து.. விலை என்ன..? மத்திய அரசு வெளியீடு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு, தற்போது கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் ‘அறிவிக்கப்பட வேண்டிய நோய்’ என அறிவித்துள்ளன.

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் பி (Amphotericin B) என்ற மருந்து வார்தாவில் உள்ள ஜெனிடிக் லைப் சையின்சஸ் (Genetic Life Sciences) என்ற நிறுவனம் சார்பில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று வெளியிட்டார். வரும் திங்கட்கிழமை முதல் இந்த மருந்து விற்பனைக்கு வர உள்ளது. இந்த மருந்து ஒன்றின் விற்பனை விலை ரூ.1,200 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்