"நீங்க இங்க என்ன ராஜா பண்றீங்க??.." 'Uniform' எடுக்க போன பெண் காவலாளி.. "அது பின்னாடி இருந்தத பாத்து பயந்தே போய்ட்டாங்க.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில், திடீரென பெண் காவலாளி ஒருவர், தனது யூனிபார்மை எடுக்க சென்ற போது, அங்கே அவர் கண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

பீகார் மாநிலம், சரன் மாவட்டத்தில், பலேஜா காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலாளி ஒருவர், காவல் நிலையத்தில் இருந்த தனது யூனிபார்ம் எடுக்கச் சென்ற போது, பேரதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்தது.

அதாவது, அவரது யூனிஃபார்ம் இருக்கும் சுவற்றின் மீது, பாம்பு ஒன்று ஆக்ரோஷமான நிலையில் அமர்ந்திருந்தது. தன்னுடைய யூனிபார்மை எடுப்பதற்கு முன்பாகவே அங்கு பாம்பு இருந்ததை அவர் கவனித்து விட்டார். கொஞ்சம் கவனக் குறைவாக அவர் இருந்திருந்தால் கூட, சில நேரம் ஏதாவது ஆபத்து கூட நிகழ்ந்திருக்கலாம்.

இது தொடர்பாக, மற்ற காவலாளியிடம் அந்த பெண் போலீஸ் தகவல் தெரிவிக்கவே, அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த காவல் நிலையத்திலிருந்து விஷப் பாம்பு அப்புறப்படுத்தப்பட்டது. அதே போல, அந்த விஷப்பாம்பு சீறிப்பாய்ந்த படி, காவல் நிலையத்தில் நின்றவர்களை சற்று பயமுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த கருப்பு கோப்ரா, காவல் நிலையத்தில் யூனிபார்ம் அருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அந்தப் பகுதியில் பாம்பு இது போன்று பிடிபடுவது இது ஒன்றும் புதிது கிடையாது. சரனின் பலேஜா பகுதி முதல் சோன்பூர் ரயில் நிலையம் வரை நிறைய இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட நிறைய பாம்பை பார்க்க முடியும் என அங்கு உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் எந்த பொருளை பயன்படுத்தவதாக இருந்தாலும், அதனை ஒரு முறை சோதித்து, பாம்பு அல்லது வேறு ஏதேனும் உயிரினம் இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு, பின்னர் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரயில் நிலைய அதிகாரியின் அறைக்குள் பாம்பு இருந்த புகைப்படங்களும், பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றுக்குள் பதுங்கிய படி பாம்பு இருந்ததும், ஷூ ஒன்றிற்குள் பாம்பு ஒளிந்து இருந்ததும் என சமீப நாட்களில் நிறைய பாம்பு தொடர்பான செய்திகள், அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SNAKE, BIHAR, POLICE STATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்