கிடைத்தது ‘Black Box’.. இதில் என்னவெல்லாம் பதிவாகும்..? தரவுகளை எடுக்க எத்தனை நாள் ஆகும்..? முழு விவரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹெலிகாப்டர், விமானங்களில் பயன்படுத்தப்படும் கருப்புப்பெட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி உட்பட 14 பேர்  Mi-17V5 ரக ஹெலிகாப்டரில் நேற்று பயணம் செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்த போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் உயிரழுந்தவர்களுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே இந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில் ஹெலிகாப்டரில் இந்த கருப்புப்பெட்டி (Black Box) ராணுவ அதிகாரிகளால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்து பார்த்த பின் விபத்து குறித்த கூடுதல் தகவல் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருப்புப்பெட்டி என்பது விமானம் அல்லது ஹெலிகாப்டரில் தகவல் சேமிக்கப் பயன்படும் தொழில் நுட்ப கருவியாகும். விமானம் விபத்துக்குள்ளானால் அதற்கான காரணத்தை கண்டறிய இந்த கருப்புப்பெட்டி உதவும். இதில் விமானியறையின் குரல் பதிவு, விமானம் பறக்கும் வேகம், உயரம், விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம், என்ஜின் செயல்பாடுகள் உள்ளிட்ட 400 தவறான தகவல்கள் சேமிக்கப்படும்.

விமானம் விபத்துக்குள்ளானால் சுமார் 30 நாட்கள் வரை இந்த கருப்புப்பெட்டியில் இருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கும். இந்த கருப்புப்பெட்டி 1100 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பத்தை தாங்க கூடியது. கருப்புப்பெட்டியை ஆய்வு செய்து அதனுள் இருக்கும் தரவுகளை பெற 10 முதல் 15 நாட்கள் ஆகலாம். இந்த கருப்புப்பெட்டி தொழில் நுட்பத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வாரன் என்பவர் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்