'கொரோனா' பரவாமல் தடுக்க 'ப்ரோமோஷன்' ... பேசு பொருளான கொல்கத்தா 'மாஸ்க்குகள்' ... 'உண்மை' நிலவரம் என்ன ?
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இந்தியா வரை பரவி தீவிரமடைந்துள்ள நிலையில், கொல்கத்தாவில் பாஜக உறுப்பினர்கள் விநியோகம் செய்த மாஸ்க்கில் மோடியின் பெயர் பயன்படுத்தப்பட்டது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரசால் இதுவரை சுமார் மூயாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் இந்தியாவின் டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளில் சில பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பொது வெளியில் செல்லும் போது மக்கள் அனைவரும் மாஸ்க்குகளை அணிந்து செல்கின்றனர்.
இதையடுத்து கொல்கத்தா பகுதியிலுள்ள பாஜக உறுப்பினர்கள் சிலர், மாஸ்க்குகளை பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் மற்றும் பாஜக சின்னத்துடன் பொது மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் போதும் விளம்பரத்தை தேடிக் கொள்கின்றனர் என்ற கருத்துக்கள் இணையத்தில் வலம் வந்தன. மேலும் சிலர், இந்த மாதிரியிலான மாஸ்க்குகள் வைரஸ் பரவுவதை தடுக்காது எனவும் தங்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து மேற்கு வங்க மாநில பாஜக சார்பில், 'இது கட்சி சார்பில் எடுக்கப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியல்ல. சிலர் தங்களது தனிப்பட்ட விருப்பத்திற்காக இது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இலங்கை' வீரர்களுடனான ஹேண்ட் ஷேக் ... நோ சொன்ன 'இங்கிலாந்து' கேப்டன் ... 'ஜோ ரூட்டின்' அதிரடி முடிவு !
- ஆயிரக்கணக்கான 'உயிர்களை' பலி வாங்கி... 'உலகம்' முழுவதும் பரவி நிற்கும் 'கொரோனா'... 'மருந்து' சொல்லும் 'அசாம் எம்.எல்.ஏ'
- '500 கோடியில்' பிரமாண்டமான திருமணம்... 9 நாட்களுக்கு 'தடபுடல்' விருந்து... 'அசத்தும் அமைச்சர்' யாருன்னு பாருங்க!
- ‘இவங்கலாம் இருக்குற கட்சியில நம்மளால இருக்க முடியாது!’ - பாஜகவில் இருந்து விலகிய நடிகை.
- 'வண்டிய விடுறா சைனாவுக்கு' ... தயாரான 18 மூலிகை கொண்ட மருந்து... கொரோனாவுக்கே சவால் விடும் ஏலியன் சித்தர் !
- ‘இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கணும்’... ‘ஒடுக்க முடியாவிட்டால்’... ‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்’... ‘சென்னையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி’!
- "எது சூச்சின் டெண்டுல்கரா?..." "யாருப்பா அது... யாருக்காவது தெரியுமா?..." 'ஐ.சி.சி'. கிண்டல் செய்து 'வீடியோ' வெளியீடு...
- 'பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்'... 'சத்தியமா நான் எதிர்பாக்கல'... உருகி நின்ற இந்த நபர் யார்?
- ஆத்தாடியோவ்! 'நிமிஷத்துக்கு' ₹ 11 ஆயிரம்... ஒரு மணி நேரத்திற்கு ₹ 6.75 லட்சம்... நாளொன்றுக்கு ₹ 1.62 கோடி!
- ஒரே ஒரு 'ஸ்மால்' அட்வைஸ் தான்... தலைநகரை மீண்டும் 'தக்கவைத்த' அரவிந்த் கெஜ்ரிவால்!