VIDEO: முதல்வர் முன்னால் ‘சண்டை’ போட்ட அமைச்சர், எம்பி.. ஓடி வந்து தடுத்த போலீசார்.. பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுதல்வர் முன்னிலையில் அமைச்சர் மற்றும் எம்பி சண்டையிட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கர்நாடகாவின் ராமநகராவில் அரசு விழா நடைபெற்றது. அதில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்றார். மேலும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் பெங்களூரு ஊரக தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி கே சுரேஷ் மற்றும் கர்நாடக மாநில அமைச்சர் அஸ்வத் நாராயணனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த டி கே சுரேஷ் மேடையில் பேசிக்கொண்டிருந்த அமைச்சரை நோக்கி கோபமாக சென்று வாக்குவாதம் செய்தார்.
உடனே அருகில் இருந்த நிர்வாகிகள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்தனர். இதனிடையே மேடைக்கு கீழே இருந்த பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் கடுமையான வார்த்தை போர்களில் ஈடுபட்டனர்.
உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இரண்டு தேசிய கட்சிகளை சேர்ந்த எம்பி மற்றும் அமைச்சர் பொதுமேடையில் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒட்டல்களில் கத்தரிக்காய்க்கு '144 தடை' போட்ட உரிமையாளர்கள்... உணவு பிரியர்கள் ஷாக்!
- 137-வது காங்கிரஸ் ஆண்டு விழா: ஏற்றும்போதே சோனியா கைகளிலேயே அவிழ்ந்து விழுந்த கொடி..!
- திருக்குறளை எழுதியது ஒளவையாரா? திருவள்ளுவரா? 'பாவம் அவரே கன்பீஸ் ஆகிட்டாரு..!- பாஜக எம்.எல்.ஏ-வின் கலகல..!
- கர்நாடகா டூ வியட்நாம்.. கடல் கடந்த காதல்.. கைகோர்த்து அசத்திய ஜோடி.. ஒரு ரொமான்டிக் சுவாரஸ்யம்.
- அதிகாரத்திமிர்... பாஜக-வை குத்திக்காட்டி திமுக-வை கடுமையாக சாடிய சீமான்..!
- 'இப்படி செய்தால்'.. டிஜிபி-யை பாராட்டும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்.. அண்ணாமலை பேட்டி...!
- நெல் அறுவடையின்போது வயலுக்குள் இருந்து அச்சுறுத்திய முதலை... அச்சத்தில் விவசாயிகள்!
- நான் மனுஷங்க மேல 'கம்ப்ளைன்ட்' கொடுக்க வரல சார்...! 'நாலு பசுமாடுகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த விவசாயி...' - 'புகாரை' கேட்டு ஆடிப்போன போலீசார்..!.
- BREAKING: குருநாதா, நீ இங்கையும் வந்துட்டியா...? இந்தியால '2 பேருக்கு' ஓமிக்ரான் வைரஸ் கன்ஃபார்ம்...! - எந்த மாநிலத்தில்...?
- வேலை செய்ய நாடாளுமன்றம் அட்ராக்டிவ் பிளேஸ் இல்லன்னு யாருங்க சொன்னா? சர்ச்சையான சசிதரூர்!