'என்ன யாருன்னு தெரியுதா'... 'அதிகாரியை செருப்பால் அடித்த டிக்டாக் பிரபலம்'... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிக்டாக் பிரபலமும், பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான சோனாலி போகட், வேளாண் சந்தைக் குழுவின் உறுப்பினர் ஒருவரைச் செருப்பால் அடித்த வீடியோ  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர் சோனாலி போகட். இவர் நேற்று விவசாயச் சந்தையை ஆய்வு செய்யச் சென்றார். அப்போது விவசாயிகள் அளித்த புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு, வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்திக்கச் சென்றார். அவரை சந்தித்த சிறிது நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி சுல்தான் சிங்கை கடுமையாகத் தாக்கினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்துப் பேசிய சுல்தான் சிங், ''என்னைச் சந்திக்க வந்த சோனாலி, என்னை யார் என்று தெரிகிறதா எனக் கேட்டார். நான் தெரியும்,  நீங்கள் ஆதம்பூர் தேர்தலில் போட்டியிட்டவர் எனக் கூறினேன். பின்பு விவசாயிகளின் புகார் மனுக்களை வாங்கி வைத்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினேன். உடனே அவர், ஏன் ஆதம்பூர் தேர்தலில் என்னை எதிர்த்தாய் எனக் கேட்டார். அதற்கு நான், எப்போதோ நடந்த சம்பவத்தை ஏன் தற்போது நீங்கள் பேசுகிறீர்கள் எனக் கூறினேன்.

அதற்கு அவர் நீ என்னைத் துஷ்பிரயோகம் செய்து விட்டாய், எனக் கூறிக்கொண்டே என்னைச் செருப்பால் அடிக்க தொடங்கி விட்டார்'' எனச் சுல்தான் சிங் கூறியுள்ளார். இதற்கிடையே இந்த சம்பவத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் சிங் சுர்ஜேவாலா, ''பொது இடத்தில் அதிகாரியைத் தாக்கிய சோனாலி போகட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்