'பாதுகாப்புக்கு' நின்ற 'காவலரை' அழைத்து.... 'கொரோனா' 'பாதுகாப்பு' நடவடிக்கை எனக் கூறி... வாயில் 2 மடக்கு 'கோமியத்தை' ஊற்றிய பா.ஜ.க நிர்வாகி 'கைது'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொல்கத்தாவில் பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புக்கு நின்ற காவலருக்கு மாட்டு கோமியம் கொடுத்ததாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

வடக்கு கொல்கத்தாவின் ஜோராசங்கோ பகுதியின் பாஜக நிர்வாகியாக நாராயண் சட்டர்ஜி என்பவர் உள்ளார். இவர் கடந்த திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். அதில், மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும் எனக்கூறி நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கியதாக தெரிகிறது. அப்போது சீருடையில் இருந்த பாதுகாவலர் ஒருவரை அழைத்து அவருக்கும் மாட்டு கோமியம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செவ்வாய்கிழமை காலை, பிண்டு ப்ராமனிக் என்ற அந்த பாதுகாவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நாராயண் சட்டர்ஜியை கைது செய்தனர்.

இதுகுறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் சயண்டன் பாசு கூறுகையில், சட்டர்ஜி பாஜக நிர்வாகிதான் எனவும் ஆனால் இந்த நிகழ்வுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார்.

KOLKATTA, COW URINE, BJP, ARREST

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்