ஒரு மாசம் லீவ் தருவீங்களா...? 'வீட்டு வேலை செஞ்சிட்டு இருந்தவங்களுக்கு கெடச்ச வாய்ப்பு...' - பட்டைய கெளப்பும் பெண்மணி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாதேர்தல் முடியும் வரை நான் வீட்டு வேலைக்கு வரமாட்டேன் என விடுப்பு எடுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் கலீதா மாஜ்கி.
தமிழகம் மட்டுமல்லாது மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்து வருகிறது. அங்கு பாரதிய ஜனதா கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரசும் முட்டி மோதி வருகின்றனர்.
கடந்த 2010 ஆண்டு பொது தேர்தலில் 42 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் இந்த தேர்தலிலாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பல வேட்பாளர்களுக்கு மத்தியில் எளிய வீட்டு பணிப் பெண் ஒருவரும் போட்டியிடுகிறார் என்பது அங்கு விசேஷமாக பார்க்கப்படுகிறது.
அஷ்க்ரம் தொகுதிக்குட்பட்ட மஜ்பரா என்ற பகுதியில் வசித்து வரும் கலிதா மாஜ்கி என்ற பெண்மணி, பல வீடுகளில் வீட்டு வேலை செய்து பாத்திரம் தேய்த்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஆஷ்க்ரம் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
கலிதா மாஜ்கி, பள்ளி படிப்பை முடிக்கவில்லை என்றாலும் அரசியல் அறிவில் miguvilமிகுந்த தேர்ச்சி பெற்றவர். கடந்த 5 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வருகிறார்.
2018 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலிலும் போட்டியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக இந்த முறை பாரதிய ஜனதா கட்சிய கலிதாவை எம்.எல்.ஏ வேட்பாளராக அறிவித்துள்ளது.
வீட்டு வேலை செய்து அரசியலில் ஆர்வமுள்ள கலீதாவை பிரதமர் மோடியும் தனிப்பட்ட முறையில் கலீதாவை பாராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதில், 'பாரதிய ஜனதா கட்சி திறமையையும் உழைப்பையும் அங்கீகரிக்க தவறியதில்லை' என குறிப்பிடுள்ளார்.
இந்நிலையில் வீட்டு வேலை செய்யும் கலீதா தான் எம்.எல்.ஏவாக நிற்கும் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் என, தான் வீட்டு வேலை பார்த்து வந்த உரிமையாளர்களிடத்தில் தனக்கு ஒரு மாதம் விடுப்பு தருமாறு கேட்டுள்ளார்.
அஷ்க்ரம் தொகுதி தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வசமுள்ள நிலையில் கலீதாவுவின் முயற்சி, அணுகுமுறையும் எளிமையான தோற்றமும் அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மேற்கு வங்கத்தில் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கரண்ட் எப்போ வரும், எப்போ போகும்னே தெரியாது...' 'திமுக ஆட்சியில கம்பெனிங்கலாம் எடத்த காலி பண்ணிட்டே போய்ட்டாங்க...' 'ஆனா இப்போ நிலைமையே வேற...' - முதல்வர் அதிரடி பேச்சு...!
- ‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...’ ‘இந்த பகுதியை’ தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்...! - தமிழக முதல்வர் அறிவிப்பு...!
- 'அவங்க ரெண்டு பேரும் தான் என் தெய்வம்...' 'ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரியது எங்கள் ஆட்சி...' - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை...!
- இவங்க யாருன்னு தெரியுதா...? 'தேர்தல் களத்தில் இறங்குறேன்...' 'அந்த' கட்சியோட கொள்கை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...! - மனம் திறக்கும் அம்பை தொகுதி வேட்பாளர்...!
- எல்லாமே 'ஒரு' ரூபாய் துட்டு...! ஏன் டெபாசிட் பணத்த இப்படி கட்டுறீங்க...? - வேட்பாளர் கூறும் வியக்க வைக்கும் காரணம்...!
- இங்க 'வலிமை அப்டேட்' இருக்கு மக்களே...! இதையே ஒரு அப்டேட்டா நெனச்சு கண்டிப்பா பண்ணுங்க...' - வைரலாகும் போட்டோ...!
- 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்...' 'தமாகா தலைவர் ஜி.கே.வாசன்...' - தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் திடீர் சந்திப்பு...!
- '20 ரூபாதான் இருக்கு.. ஏத்திக்குவீங்களா?'.. முன்னாள் எம்.எல்.ஏ பற்றி ஆட்டோ ஓட்டுநர் எழுதிய ‘வைரல்’ பதிவு!
- ‘தற்கொலையா..? நானா?’.. திமுக எம்.எல்.ஏ பூங்கோதைக்கு என்னதான் ஆச்சு?.. ‘அவரே வெளியிட்ட மறுப்பும் பரபரப்பு அறிக்கையும்!’
- ‘கட்சி நிகழ்வுக்கு பின் MLA பூங்கோதைக்கு நடந்தது என்ன ?’.. ‘மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனை அழைத்து வரப்பட்டாரா?’