'கழிப்பறை வசதி கூட இல்ல'... 'வேட்பாளரா அறிவித்தது கூட தெரியாது'... 'இப்படியும் ஒரு எம்எல்ஏ வா'?... ஆச்சரிய பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாவேட்பாளராக அறிவிக்கப்பட்டதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பின்னர் அண்டை வீட்டார் சொல்லித்தான் தெரியும் எனக் கூறினார் சந்தனா பவுரி.
மேற்குவங்கத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களிலேயே ஏழை வேட்பாளராக அறியப்படும் சந்தனா பவுரி என்ற பெண்மணி, தேர்தலில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார். மண் குடிசை வீட்டில், குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் வசிக்கும் ஏழைப் பெண் ஒருவர் பாஜக சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றும் இருக்கிறார். இவரே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏழை வேட்பாளராக விளங்குகிறார்.
கழிப்பறை வசதி கூட இல்லாத மண் குடிசையில் வாழும், தினக்கூலியாக வேலை பார்ப்பவரின் மனைவியான 30 வயதாகும் சந்தனா பவுரி, மேற்கு வங்கத்தின் சல்தோரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மொந்தல் என்பவரை 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்.
சந்தனா பவுரியின் கணவர் ஷரவன் கட்டிட வேலை பார்ப்பவர். தினக்கூலியாக 400 ரூபாய் பெற்றுவருகிறார். அதிலும் மழைக் காலங்களில் இந்த வருமானம் கூட அக்குடும்பத்திற்குக் கிடைக்காது. வேட்பு மனுவில் சந்தனா பவுரி குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி அவருடைய அசையா சொத்துகளின் மதிப்பு 31,975 ரூபாய் தான்.
அவரின் வீட்டில் கழிவறை, குடிநீர் வசதிகள் இல்லை. அவருடைய வீட்டில் இரண்டு சிறிய அறைகள், அதில் ஒரு அலுமினிய பெட்டி, ஒரு மேசை, ஒரு ஃபேன், மரக்கட்டைகள் அடுக்கப்பட்ட ஒரு படுக்கை மற்றும் பள்ளி புத்தகங்கள் உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '20 ஆண்டுகள் கழித்து... தமிழக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைக்கிறது பாஜக'!.. முழு விவரம் உள்ளே!
- BREAKING: 'உச்சக்கட்ட பரபரப்புக்கு இடையில்...' 'கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியின் முடிவு வெளியானது...' வென்றது யார்...? - ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட்...!
- தமிழக சட்டமன்ற தேர்தல்... அரசியல் கட்சிகளின் உண்மையான பலம் என்ன?.. வாக்கு சதவீத விவரங்கள் உள்ளே!
- திரும்பிப் பார்க்க வைத்த ‘கன்னியாகுமரி’ இடைத்தேர்தல் நிலவரம்.. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் ‘விஜய் வசந்த்’ முன்னிலை..!
- தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைகிறதா பாஜக?.. முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை!.. அனல் பறக்கும் தேர்தல் முடிவுகள்!
- ‘முதல் சுற்று முன்னிலை நிலவரம்’!.. ஒரு தொகுதியில் ‘பாஜக’ முன்னிலை..!
- ஸ்ருதிஹாசன் மீது தேர்தல் அலுவலரிடம் பரபரப்பு புகார்!.. வலுக்கும் மோதல்... குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி போர்க்கொடி!.. என்ன நடந்தது?
- ‘அது ரொம்ப நேரம் கழிச்சு தான் தெரிஞ்சது’!.. பாஜக வேட்பாளர் காரில் EVM இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்.. எலெக்ஷன் கமிஷன் எடுத்த அதிரடி ஆக்ஷன்..!
- 'பாஜக விளம்பரத்தில் ப.சிதம்பரம் மருமகளின் படம்'... 'செம கடுப்பான ஸ்ரீநிதி'.... ட்விட்டரில் வைரலாகும் அவர் சொன்ன பதில்!
- முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரை கற்களால் தாக்கிய மர்ம நபர்கள்.. தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த அதிர்ச்சி..!