‘யம்மாடியோவ்’! ஒரு செகண்டுக்கு ஒரு ‘ஆர்டர்’.. லாக்டவுனில் இந்திய மக்கள் வளைச்சு வளைச்சு வாங்கிய உணவு இதுதானாம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்த ஆண்டு ஸ்விக்கியில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்து அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் இந்த ஆண்டு இந்திய மக்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவு பிரியாணி என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் ஒரு வினாடிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிரியாணியை மக்கள் ஆர்டர் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மசால் தோசை, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைட் ரைஸை அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

ஒரு வெஜ் பிரியாணி ஆர்டர் செய்யப்படும் அதேநேரத்தில் 6 சிக்கன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் அதிக மக்கள் விரும்பும் உணவு சிக்கன் பிரியாணி என்பது என தெரியவந்துள்ளதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

ஸ்விக்கி ஆண்டுதோறும் வெளியிடும் 'ஸ்டேட்இட்ஸ்டிக்ஸ்' (Stateatstics) தரவுகளின்படி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து ஸ்விக்கியின் புதிய வாடிக்கையாளர்கள் ஆகியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் அலுவலக முகவரிகளைவிட வீட்டு முகவரிக்கு 5 மடங்கு அதிகமாக ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை ஊரடங்கு காலத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் 9 மடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல் வீட்டிலிருந்து வேலை செய்யும் பலர் டீ மற்றும் காபியை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சுமார் 2 லட்சம் பானிபூரி ஆர்டர்களும் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்