இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சல்!.. அவசர அவசரமாக கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு!.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இமாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தில் வலசை வந்த வெளிநாட்டுப் பறவைகள் உயிரிழந்ததற்கு பறவைக் காய்ச்சலே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இதுவரை உயிரிழந்த 2400 பறவைகளில், பெரும்பாலானவை பட்டை தலை வாத்துகளாகும்.

பாங் அணைப்பகுதியில் இருந்து இறந்த 5 வாத்துகளின் உடல்கள் எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், எச்5என்1 என்ற ஏவியன் இன்புளுயன்சா வைரஸ் தாக்கியதால் தான் பறவைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    

இந்நிலையில், கேரளாவில் கடந்த சில வாரங்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாத்துக்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இதனால் அங்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.

எனவே, ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதியில் உள்ள பறவைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் இரு மாவட்டங்களிலும் 36 ஆயிரம் வாத்துக்களை கொல்ல அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் சில மாவட்டங்களில் 170 க்கும் மேற்பட்ட பறவைகள் எச்5என்1 நோயால் உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து நேற்று 425க்கும் அதிமான பறவைகள் இறந்ததால் அங்கும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளதாக மாநில கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கால்நடை வளர்ப்போர் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில அரசு தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பறவைக் காய்ச்சல் உறுதியானதைத் தொடர்ந்து பறவைகள் மற்றும் விலங்குகளில் உயிரிழப்பு குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாநில அரசு கூறியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் பறவைகள் தொடர் மரணம் காரணமாக பதேபூர், தேரா, ஜவாலி மற்றும் இந்தோரா பகுதியில் இருந்து பறவைகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும், இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோழி மற்றும் மீன்கள் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்