"இதுவும் ஒரு வழி பண்ணிடும் போல??..." வேகமாக பரவும் 'பறவைக்' காய்ச்சல்... புதிதாக 'உறுதி' செய்த 'மாநிலம்'... பீதியில் 'மக்கள்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களை தொடர்ந்து கேரளாவிலும் பறவை காய்ச்சல் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட காகங்கள் பலியானதை அடுத்து அங்குள்ள பகுதிகளில் பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநில அளவில் கட்டுப்பாடு அறை மற்றும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்ததை போல மத்திய பிரதேச மாநிலத்தின் 3 மாவட்டங்களிலும் இந்த பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவியுள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில், தற்போது கேரள மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான தகவலை கேரள வனத்துறை அமைச்சர் கே. ராஜு உறுதி செய்துள்ளார். ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வாத்துகள் சில உயிரிழந்த நிலையில் அவற்றின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக கேரள மாநிலத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மக்களை ஒரு வழி செய்து வரும் நிலையில், தற்போது பறவைக் காய்ச்சல் வைரஸும் சில மாநிலங்களில் வேகமாக பரவி வருவது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்