‘கடைசியா ஊருக்கு வந்தது அன்னைக்குதான்’.. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி.. வெளியான உருக்கமான தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் தேஜ் என்பவரும் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இந்தியாவின் முப்படை பாதுகாப்புப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக, இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விபத்தில் பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாய் தேஜ் (Sai Tej) என்பவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்தூர் மாவட்டம் குரபலகோட்டா கிராமம் சாய் தேஜின் சொந்த ஊர். கடந்த 2013-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்த இவர், பாதுகாப்புப் படையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றினார். பிபின் ராவத்தின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக சாய் தேஜ் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் சாய் தேஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாய் தேஜ்க்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சாய் தேஜ் கடைசியாக விநாயக சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிபின் ராவத் விபத்தில் சிக்கிய mi-17-v5 ஹெலிகாப்டரில் உள்ள பிரத்யேக வசதிகள்.. முழு விவரம்
- ராணுவ ஹெலிகாப்ட்டர் விபத்து: 14 பேரில் 13 பேர் உயிரிழப்பு
- 'களத்தில் குதிக்கும் 'தல'... 'ஆனா இதுமட்டும் பண்ண வேண்டாம் 'தோனி'... ராணுவத்தின் புதிய அறிவிப்பு!
- 51 மாடி கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!