'ரூ. 52 ஆயிரத்திற்கு ‘சரக்கு’ பில்...' '48 லிட்டர்...' '128 பாட்டில்...' 'குடிமகனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை...'
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரில் உள்ள ஒரு கடையில் ₹52,841-க்கு மதுபானம் வாங்கியதற்கான பில் ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இதையடுத்த மொத்தமாக ஒருவருக்கு மதுபானத்தை விற்பனை செய்த கடை ஊழியர் மீது, அம்மாநில கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகு 46 நாட்கள் கழித்து கர்நாடகாவில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதையடுத்து , பெங்களூருவில் உள்ள மதுபான கடை ஒன்றில் 48 லிட்டர் அளவிற்கு மதுபானங்களை வாங்கிச் சென்ற ஒருவர், அதற்கான ரசீதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 6 ஒரு லிட்டர் மதுபான பாட்டில், 12 புல், 50 ஆப், 18 பீர் மற்றும் 42 குவாட்டர் என மொத்தம் 17 வகையிலான, 128 பாட்டில் மதுபானங்கள் வாங்கப்பட்டதாக, அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பதிவு இணையத்தில் வைரலானதை அடுத்து, சில்லறை வர்த்தகக் கடையில் மொத்தமாக விற்பனை செய்த குற்றத்திற்காக கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுபானங்களை வாங்கிச் சென்றவர் மீது வழக்குப்பதிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபானங்களை ஏராளமானோர் வாங்கிச் சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே கர்நாடகா மாநிலம் கோலாரில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதை ‘குடி’மகன்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 40 நாட்களுக்கு பின்னர் கடை திறக்கப்பட்டதால், அதை கொண்டாட பட்டாசுடன் வந்ததாக அந்த குஷியான ‘குடி’மகன் தெரிவித்தார். ஆனால், இவர்கள் செய்த அலம்பல் அந்தப்பகுதி மக்களிடம் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...
- "என் பொண்ண கட்டி அணைச்சு கொஞ்சி எவ்ளோ நாளாச்சு"... உற்சாகமடைந்த "மகள்"... 'நெஞ்சை' கரைய வைக்கும் 'செவிலியர்' - மகள் 'வீடியோ'!
- ‘சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள’... ‘முன்னாள் முதல்வரின் மகன் திருமணம்’...'துணை முதல்வர் எச்சரிக்கை’!
- ‘கொரோனா பயத்தால்’... ‘சூட்கேசுக்குள் நண்பனை வைத்து’... ‘வசமாக சிக்கிய மாணவன்’!
- கொரோனா 'உயிரிழப்பு' சதவிகிதத்தில்... மஹாராஷ்டிரா,'தமிழ்நாடை' பின்னுக்குத்தள்ளி... 'முதலிடம்' பிடித்த மாநிலம்!
- #WATCH #VIDEO: ‘டயாலிசிஸ் செய்த அம்மாவை காப்பாத்தணும்’... ‘ஊரடங்கால் மருந்து வாங்க முடியாமல் தவித்த இளம்பெண்’... ‘கண் கலங்க வைத்த சம்பவம்’!
- 'கொரோனாவ' கூட கட்டுப்படுத்திடலாம் போல... 'இத' கண்ட்ரோல் பண்ண முடிலயே... அதிரடியில் இறங்கிய போலீசார்!
- 'பக்கத்தில் நெருங்க முடியாத துயரம்'... கதறிய மகளைப் பார்த்து... கண்ணீர் விட்ட தாய்... ஃபோனில் அழைத்து முதல்வர் சொன்ன வார்த்தைகள்!
- '10 மாதக்' குழந்தைக்கு 'கொரோனா' தொற்று... தனிமைப்படுத்தப்பட்டு 'சிகிச்சை'... 'பதற்றத்தில்' குடும்பத்தினர்...
- 'லாக்டவுனை' மீறி சுற்றித்திரிந்த 'இளைஞர்கள்..'. 'கேள்விகேட்ட' போலீசார் மீது 'சரமாரி' தாக்குதல்... 'துப்பாக்கியால்' சுட்டுப்பிடித்த 'இன்ஸ்பெக்டர்...'