கல்யாணம் நடக்க இருந்த நேரத்துல.. மேடையில் Entry கொடுத்த இளைஞர்.. "பொண்ணு பக்கத்துல வந்து".. ரெண்டான கல்யாண வீடு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீப காலமாகவே, திருமண மேடையில் வைத்து நிகழும் ஏராளமான நிகழ்வுகளை நாம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக அதிகம் பார்த்து வருகிறோம்.

Advertising
>
Advertising

Also Read | "அட, இவரு என்னப்பா இங்க??.." தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளம் இந்திய வீரர்.. வைரலாகும் புகைப்படம்

திருமணம் நடக்க இருந்த நேரத்தில், மாப்பிள்ளையை அறைந்து விட்டு மணப்பெண் மேடையில் இருந்து வெளியேறிய நிகழ்வும், திருமண மேடைக்கு மாப்பிள்ளை நண்பர்களுடன் குடித்து விட்டு வந்ததால் பரபரப்பான திருமண மண்டபம் என சமீபத்திய காலத்தில் திருமண மேடையிலேயே நிறைய எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது ஒரு திருமண மேடையில் நடைபெறும் வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

மேடை ஏறி குங்குமம் வைத்த இளைஞர்

பீகார் மாநிலம் நலந்தா மாவட்டத்தில், திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மணமக்களின் வீட்டார் அங்கே கூடி இருந்தனர். அந்த சமயத்தில், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அப்போது, திடீரென மேடையில் ஏறி வந்த ஒரு இளைஞர், மணப்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்து, அவரது கழுத்தில் மாலையும் அணிவித்ததாக கூறப்படுகிறது.

பதறியடித்த உறவினர்கள்

இதனைக் கண்டதும் அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் பதறியடிக்க, என்ன நடக்கிறது என்பது புரியாமல், மாப்பிள்ளை முழித்துக் கொண்டே இருக்கிறார். இதன் பின்னர், மேடை ஏறி குங்குமம் வைத்த அந்த இளைஞரை மணமக்களின் உறவினர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த அந்த இளைஞர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த இளைஞர் மீது போலீஸ் நிலையத்தில் மணப்பெண்ணின் குடும்பத்தினர் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

திருமணமும் இதன் காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இதன் பின்னால் உள்ள பல்வேறு பரபரப்பு காரணம், பின்னர் தெரிய வந்துள்ளது.

இளைஞர் சொன்ன பரபரப்பு தகவல்

மேடையில் ஏறி மணப்பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்த இளைஞரின் பெயர் முகேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இவரும், திருமணம் நடக்க இருந்த அந்த இளம் பெண்ணும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளதாக முகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறிய தகவலின் படி, அந்த பெண்ணின் வீட்டில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேறு திருமணத்தையும் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

மறுத்த குடும்பத்தினர்

தனக்கு விருப்பம் இல்லாமல், திருமணம் நடைபெற இருந்ததால், அந்த இளம்பெண் தனது காதலன் முகேஷிடம் ஆலோசனை ஒன்றை கூறி உள்ளார். அதன்படி, திருமண மேடைக்கு வந்து தனது நெற்றியில் குங்குமம் வைக்குமாறு கூறியதாக மருத்துவமனையில் இருக்கும் முகேஷ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், என்ன செய்ய வேண்டும் என்பதை காதலி தெரிவிக்கவில்லை என்றும் முகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அதே வேளையில், தங்களின் மகளும் இளைஞர் முகேஷும் காதலிக்கவில்லை என்றும், அந்த இளைஞர் பொய் கூறுவதாகவும் இளம்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read | "மொத்தமா 5000-க்கும் மேல.." பூட்டிய வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த போலீஸ்.. உள்ள என்ன தான் இருக்குன்னு பாத்தப்போ காத்திருந்த அதிர்ச்சி

BIHAR, YOUTH, MARRIAGE, FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்