7 வருச கனவு.. கை'ல 7 மாத கைக்குழந்தை.. வேற லெவலில் சாதித்துக் காட்டிய பெண் கான்ஸ்டபிள்.. சுவாரஸ்ய பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இங்கே பலரும் ஏதாவது ஒரு விஷயத்தில் கனவு கண்டு, அதனை அடைய வேண்டி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும் வருகிறார்கள்.

Advertising
>
Advertising

இதற்கு மத்தியில், ஏராளமான தடைகள் வந்தால் கூட அவை அனைத்தையும் கடந்து அதில் வெற்றி பெற  வேண்டும் என்பதில் தான் லட்சியமாக இருப்பார்கள்.

அப்படி தனது கனவை நோக்கி நடை போட்டு, அதில் பெண் ஒருவர் சாதித்துக் காட்டியுள்ள சம்பவம், பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

பீகார் மாநிலம், பெகுசராய் மாவட்டத்தின் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் பாப்லி குமாரி. கடந்த 2015 ஆம் ஆண்டு, கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்த பாப்லி, பெரிய பதவியில் அமர வேண்டும் என்பது பெரும் கனவாக இருந்துள்ளது. மேலும், தனது கனவை நனவாக்கவும் முயற்சிகளை கையாண்டு வந்துள்ளார்.

இதற்காக, மாநில பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வுகளுக்காக காவல்துறையில் வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்திருக்கிறார் பாப்லி. அப்படி இரண்டு முறை தேர்வு எழுதிய பாப்லி, அதில் தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது முயற்சியில் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார்.

7 வருட கனவு நனவான பாப்லி குமாரிக்கு தற்போது 7 மாதத்தில், குழந்தையும் உள்ளது. இந்த சம்பவம் பற்றி பேசிய பாப்லி குமாரி, "எனது குடும்பத்தில் மூத்த மகளான நான், இளைய வயதிலேயே குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். இதன் பின்னர், 2015 ஆம் ஆண்டு, பிஹார் காவல்துறையில் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இதை விட பெரிய அரசு பதவியில் சேர வேண்டும் என நான் முயற்சித்து கொண்டே இருந்தேன். தொடர்ந்து, பிபிஎஸ்சி தேர்வு எழுதி, மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றேன்.

திருமணத்திற்கு பின்னர், எனது கனவை அடைய எனது கணவர் என்னை அதிகம் ஊக்கப்படுத்தினார். அவரின் பங்களிப்புடன் இப்போது வெற்றி பெறவும் முடிந்தது" என கூறி உள்ளார்.

குடும்பத்தினர் உதவியுடன் 7 ஆண்டுகள் தான் கண்ட கனவை 7 மாத கைக் குழந்தையுடன் டிஎஸ்பியாகவும் ஆகி சாதித்துக் காட்டியுள்ள பாப்லி குமரியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

BIHAR, DSP, CONSTABLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்