"அங்கயாச்சும் கிணறு தான்.. ஆனா இங்க.." ஓவர் நைட்டில் நடந்த அபேஸ்.. 500 டன் எடை.. "ஊர் மக்கள் வேற சப்போர்ட் ஆமே.. என்ன நடந்துச்சு?"

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள திருட்டு ஒன்று, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ந்து போகும் அளவுக்கு செய்துள்ளது.

Advertising
>
Advertising

பொதுவாக, திருடர்கள் திருட்டில் ஈடுபடும் செய்திகளை நாம் அதிகம் டிவி, செய்தித்தாள் அல்லது சமூக வலைத்தளங்களில் கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஆள் இல்லாத வீடு, கோவில், கடைகள் உள்ளிட்ட பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டு பார்த்திருப்பீர்கள்.

ஆனால், பீகார் மாநிலத்தில் நடந்துள்ள திருட்டு ஒன்று, பலரையும் வாயைப் பிளக்கச் செய்துள்ளது.

60 அடி நீளமுள்ள ஆற்றுப் பாலம்

பீகார் மாநிலம், ரோக்தாஸ் மாவட்டம், நாசிரிங்க் என்னும் பகுதி அருகே, ஆறு ஒன்று உள்ளது. இதனைக் கடந்து செல்வதற்கு வேண்டி, கடந்த 1972 ஆம் ஆண்டு சுமார் 60 அடி நீளமும், 12 மீட்டர் உயரமும், 50 டன் எடையும் கொண்ட இரும்பு பாலம் ஒன்று, மக்களின் பயன்பாட்டிற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

சேதமடைந்த இரும்பு பாலம்

இதற்கு முன்பாக நிகழ்ந்து வந்த படகு சேவை நிறுத்தப்பட்டு, அப்பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் பாலத்தை பயன்படுத்தத் தொடங்கினர். இதன் பிறகு, அந்த இரும்பு பாலமும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிகம் சேதமடைந்த காரணத்தினால் மக்கள் அதனை பெரிதாக பயன்படுத்தவில்லை. தொடர்ந்து, அதனருகே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலம் ஒன்றை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனால், இரும்பு பாலம் பயன்பாடு இல்லாமல் பழுது அடைந்து கிடந்துள்ளது. இதனையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கிராம மக்களை ஏமாற்றி, அவர்கள் உதவியுடனேயே இரும்பு பாலத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்க பெரிய ஆஃபிசர்ஸ்..

தங்களை நீர்ப்பாசன அதிகாரிகளைப் போல காட்டிக் கொண்ட அந்த கொள்ளை கும்பல், கேஸ் கட்டர் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவற்றையும் ஆற்றின் அருகே கொண்டு வந்துள்ளனனர். மேலும், பாலத்தை பழுது பார்க்க வந்துள்ளதாகவும் கூறிய அவர்கள், மூன்று நாட்கள் அங்கேயே வேலை செய்வது போல முகாமிட்டு, மொத்த பாலத்தையும் பெயர்ந்து எடுத்து லாரியில் ஏற்றிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த மூன்று நாட்களில், இரும்பு உலோகத்தை பெயர்த்து எடுக்க, அந்த கொள்ளை கும்பலுடன் சேர்ந்து, அங்குள்ள மக்களும், கிராம அதிகாரிகளும் உதவி செய்துள்ளனர். தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு பிறகு, அந்த இடத்தில் பாலம் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவுக்கு கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

காலையில பாலத்த காணோம்..

இரவோடு இரவாக பாலம் காணாமல் போனதையடுத்து, மறுநாள் காலையில் தான், வந்தது நீர்ப்பாசன துறை அதிகாரிகள் இல்லை என்பதும், இரும்பு பாலத்தை திருடிச் செல்ல வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இது பற்றி உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, வழக்குப்பதிவு செய்த அவர்கள், விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

அரசுக்கு சொந்தமான சுமார் 50 டன் கொண்ட இரும்பு பாலம் ஒன்று, கொள்ளையர்களால் திட்டம் போட்டு கொள்ளையடித்து கொண்டு செல்லப்பட்ட சம்பவம், பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

BIHAR, RIVER BRIDGE, ROHTAS, ஆற்றுப் பாலம், பீகார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்