அந்த 'மனசு' இருக்கே, அதான் 'கடவுள்'... யானைகளுக்காக '5 கோடி' ரூபாய் சொத்தை எழுதி வைத்த 'மனிதர்'... "நான் செத்துப் போனா அவங்கள யாரு பாத்துக்குறது?"!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் அக்தர் இமாம். யானைகளுக்காக அரசு சாரா என்.ஜி.ஓ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு மோதி என்ற 15 வயது யானையும், ராணி என்ற 20 வயது யானையும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், தனது மரணத்திற்கு பிறகு இரண்டு யானைகளும் அனாதையாகி விடக்கூடாது என்பதற்காக சுமார் ஐந்து கோடி மதிப்புள்ள தனது நிலத்தை யானைகள் பெயரில் எழுதி வைக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அக்தர் இமாம் கூறுகையில், 'மிருகங்கள் மனிதர்களை போல கிடையாது. அவர்கள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவை. நான் யானைகளை பல ஆண்டுகளாக பராமரித்து வருகிறேன். அவர்களை எனது பிள்ளைகள் போல கவனித்து வருகிறேன். அதனால் நான் இறந்த பின் யானை அனாதையாகி விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

மேலும், 'யானை இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. நான் வளர்த்த யானைகள் என்னை பலமுறை காப்பாற்றியுள்ளன. ரௌடிகள் சிலர் என்னை கொல்ல முயன்ற போது என் யானைகள் தான் என்னை காப்பாற்றின' என உருக்கத்துடன் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக யானைக்கு எதிராக கேரளாவில் நடந்த கொடிய சம்பவம் மிகப்பெரும் விவாதப்பொருளாக நாடு முழுவதும் உருவான நிலையில், அக்தரின் இந்த செயல் நாட்டு மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்