'ஒவ்வொரு தடவையும் நடக்குற மாதிரி போய் கடைசியில நின்னுடுது...' 'இந்த தடவ எப்படியாச்சும் பண்ணிடனும்...' - திருமணம் செய்வதற்காக இளைஞர் எடுத்த ரிஸ்க்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் 24 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி சென்று திருமணம் செய்த நபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலையில் மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அடிக்கடி கடுமையான ஊரடங்குகளும், தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பிகாரிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கவுதம் குமார் என்பவரின் திருமணமும் தள்ளிப்போடப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் உச்சககானில் வசிக்கும் கவுதம் குமாருக்கும், பாங்கா மாவட்டம் பாரத்சிலா கிராமத்தில் வசிக்கும் கும்குமுமாரி என்பவருக்கும் கடந்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் என நிச்சயிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது.
அதன்பின் மீண்டும் 3, 4 முறை திருமண ஏற்பாடுகள் நடத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே திருமணம் நிறுத்தப்பட்டது.
இதனால் வருத்தமடைந்த கவுதம் கடந்த வெள்ளிக்கிழமை திருமண ஆடைகள் அணிந்து கொண்டு, கையில் மாலையுடன் உச்சககானில் இருந்து சைக்கிளில் கிளம்பியுள்ளார்
மணமகளின் ஊரான பாரத்சிலா கிராமத்திற்கு 24 கி.மீ தூரம் சைக்கிளில் சென்ற கெளதம் அதேநாளில் விருந்தினர்கள், கொண்டாட்டங்கள், திருமண ஊர்வலம் ஏதுமின்றி எளிய முறையில் கும்குமுமாரியை திருமணம் செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஷம்புகஞ்ச் வட்டார அலுவலர் பிரபாத் ரஞ்சன், மணமக்களை நேரில் வந்து ஆசீர்வதம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கூறிய அவர், 'கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் பீகாரில் ஊரடங்கு கடுமையாக உள்ளது. மணமகன் கவுதமின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் கவுதம் திருமணம் செய்து கொண்டார். புதிதாக திருமணமான தம்பதியினருக்கு மாவட்ட கலெக்டருடன் பேசி விருது வழங்க ஏற்பாடு செய்யப்படும்' எனவும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாஸ்க் போட வேண்டாம்'... 'அதிரடியாக அறிவித்த நாடு'... உற்சாகத்தில் மக்கள்!
- 'இந்த நாடுகளுக்கு எல்லாம் போக வேண்டாம்'... 'லிஸ்டில் இருக்கும் நாடுகள்'... அமெரிக்கா எச்சரிக்கை!
- 'எங்க கம்பெனியில வொர்க் பண்றவங்க...' 'யாராச்சும் கொரோனாவால இறந்துட்டாங்கன்னா...' 'அவங்களோட 60 வயது வரை முழு சம்பளத்தை கொடுப்போம்...' - சலுகைகளை அறிவித்த 'பிரபல' கம்பெனி...!
- கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிடுது...! 'ஆள் பக்கத்துல போனாலே கொரோனா இருக்கா? இல்லையான்னு சொல்லிடும்...' எப்படி கண்டுப்பிடிக்குது...? - ஆராச்சியாளர்கள் தகவல்...!
- நாங்க 'விசாரணைய' இன்னும் தீவிரப்படுத்துவோம்...! 'எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது...' கொரோனா 'அங்க' இருந்து தான் பரவிச்சு...! - அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்...!
- பறந்து பறந்து கல்யாணம்...! 'விமானத்தை கல்யாண மண்டபமாக்கிய ஜோடி...' - எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் விமான ஊழியர்களுக்கு கெடச்ச 'ஷாக்' தகவல்...!
- முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு Martin Group உதவி!
- 'லாக்டவுன் நேரத்துல மண்டபத்துல கல்யாணம் பண்றது ரிஸ்க்...' பேசாம 'அத' வாடகைக்கு எடுத்துட வேண்டியது தான்...! - அட்டகாசமான ஐடியாவ போட்டு திருமணம் செய்த ஜோடி...!
- தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை!.. ஒரே இரவில்... ராக்கெட் வேகத்தில் உயர்வு!.. எப்படி நடந்தது?
- BREAKING: தமிழகத்தில் ஒரு வாரம் 'தளர்வுகளற்ற' முழு ஊரடங்கு...! 'தமிழக அரசு அறிவிப்பு...' - முழு விவரங்கள்...!