'தவறுதலாக டெபாசிட் ஆன 5 லட்சம்'... 'டேய் தம்பி காச கொடுத்துருடா'... 'அய்யய்யே, இந்த காசு யாரு போட்டா தெரியுமா'?... இளைஞரின் பதிலை கேட்டு நொறுங்கிப்போன அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவங்கி மூலம் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தைத் திருப்பி கொடுக்காமல், அதற்கு அந்த இளைஞர் சொன்ன பதில் வங்கி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பீகார் மாநிலம் காகாரியா மாவட்டம் பக்தியப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரது கிராம வங்கிக் கணக்கில் கடந்த மார்ச் மாதம் ரூ5.5 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது வங்கி அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்த நிலையில், அதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் ரஞ்சித் அந்த பணத்தை எடுத்து ஜாலியாக செலவு செய்துள்ளார்.
இதற்கிடையே வங்கி அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்தபோது அந்த பணம் தவறுதலாக ரஞ்சித் தாஸ் கணக்கில் வரவு வைக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ந்துபோன அதிகாரிகள் உடனே ரஞ்சித் தாஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். ஆனால் ரஞ்சித் அந்த பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
வங்கி அதிகாரிகள் நேரடியாகச் சென்று கேட்ட நிலையில், அந்த பணத்தைச் செலவு செய்து விட்டதாகவும், திருப்பி கொடுக்க முடியாது எனவும் பதிலளித்துள்ளார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், ரஞ்சித்தைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர் சொன்ன பதில் தான் அதிகாரிகளை மிரளச் செய்தது.
தனது வங்கிக் கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட பணம், ''பாரத பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) கொடுப்பதாகச் சொன்ன 15 லட்சத்தில் 5.5 லட்ச ரூபாய் என்றும், இன்னும் மீதி பணத்தை அவர் கொடுப்பார்'' எனவும் கூறியுள்ளார். மோடி கொடுத்த பணம் என்பதால் அந்த பணத்தை எடுத்து செலவு செய்ததாகவும் போலீசாரிடம் ரஞ்சித் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் செலவு செய்த பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மகளிர் ஹாக்கி அணிக்கு போன் போட்ட பிரதமர் மோடி!.. பேசப் பேச உடைந்து அழுத வீராங்கனைகள்!.. என்ன நடந்தது?
- ‘என்னால ஜெயிக்க முடியல.. மன்னிச்சுடுங்க’!.. உருக்கமாக பதிவிட்ட ‘தமிழக’ வீராங்கனை பவானி தேவி.. உடனே பதிலளித்த பிரதமர் மோடி..!
- மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பேச்சு!.. பாதிரியார் கைதான வழக்கில் புதிய திருப்பம்!.. சல்லடை போட்டு சலிக்கும் காவல்துறை!
- 'கூலி வேலை செய்யும் பெற்றோர்'!.. சபதம் போட்டு வீட்டை விட்டு வெளியேறி... ஒலிம்பிக்கில் சாதனை படைத்த... இந்த மீராபாய் சானு யார்?
- தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட... 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு!.. பிரதமர் மோடியின் கேபினட் 2.0 பின்னணி என்ன?
- '2024 டார்கெட்'!.. "பாஜகவுக்கு எதிராக கூட்டணியில்... 'அவங்க' இல்லாம எப்படி"?.. வியூகம் அமைத்து காய் நகர்த்தும் சரத் பவார்!
- தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்குமா?.. நடக்காதா?.. எடப்பாடி பழனிசாமி கேள்வி!.. பிரதமருடன் நடந்த உரையாடலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
- 'மோடியை வீழ்த்த வியூகம்!.. 15 எதிர்க்கட்சிகள் இணைந்த மாபெரும் அணி'!?.. அவசர அவசரமாக மீட்டிங் ஏற்பாடு செய்த சரத் பவார்!
- '25 நிமிடத்தில்... 30 கோரிக்கைகள்'!.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்... பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் என்ன?
- 'சும்மா நை நைன்னு அப்பா திட்டிக்கிட்டே இருக்காரு'... 'அதுக்குன்னு செய்கிற வேலையா டா இது'... போலீசாரையே நடுங்க வைத்த இளைஞர்!