மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போன கணவர்.. Wait பண்ண மனைவிக்கு 1 1/2 வருஷம் கழிச்சு காத்திருந்த ஷாக்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலம் ஜவதாரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோட்டு குமார். இவரது மனைவி பெயர் மஞ்சு. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக மருந்து கடைக்கு போய் மருந்து வாங்கி விட்டு வருவதாக கூறி சென்ற சோட்டு குமார், அதன் பின்னர் திரும்பி வரவேயில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போன கணவர்.. Wait பண்ண மனைவிக்கு 1 1/2 வருஷம் கழிச்சு காத்திருந்த ஷாக்!!
Advertising
>
Advertising

Also Read | இந்திய கொடியை அணிந்து கொண்டு.. கால்பந்து போட்டி பாக்க வந்த அர்ஜென்டினா பெண்.. காரணம் தெரிஞ்சு கொண்டாடும் இந்தியர்கள்!!

அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் கொல்கத்தா செல்ல ரெயில் நிலையம் போயிருந்த மஞ்சுவின் சகோதரர் விகாஸ், வேறொரு பெண்ணுடன் சோட்டு குமார் இருப்பதை கவனித்துள்ளார். இதனைக் கண்டதும் அதிர்ந்து போன விகாஸ், உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்றை அளிக்க, சோட்டுவை போலீசார் விசாரிக்கவும் செய்தனர். இது தொடர்பாக மஞ்சுவின் தாயார் போலீசாரிடம் கூறியதாக வெளியான தகவலின் படி, 2018 ஆம் ஆண்டு சோட்டு குமார் மற்றும் மஞ்சு ஆகியோருக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மருந்து வாங்கி வருகிறேன் என கூறிச் சென்ற சோட்டு குமார் திரும்பி வரவே இல்லை என்றும் கூறப்படுகிறது. மஞ்சுவும் கணவர் சோட்டு வருவார் வருவார் என நீண்ட காலம் காத்திருந்து வந்த நிலையில் தான் தற்போது ரயில் நிலையத்தில் வேறொரு பெண்ணுடன் அவரை விகாஸ் பார்த்துள்ளார்.

அதே போல, ராஞ்சியில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளை சோட்டு குமார் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் மஞ்சுவின் தாயார் வேதனையுடன் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இதன் பின்னர், சோட்டுவிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவர் கூறிய தகவலை கேட்டு அனைவரும் உறைந்து போயுள்ளனர். இசைக்குழு ஒன்றில் பாடகராக இருந்து வரும் சோட்டு, சினாவரியா, சுந்தர்காண்ட், ராஞ்சி, சங்ராம்பூர், டெல்லி, தியோகார் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் ஒவ்வொருவருடனும் சோட்டுவுக்கு குழந்தை உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

அதே போல, தற்போது போலீசாரிடம் புகார் கூற வந்த மஞ்சு இரண்டாவதாக சோட்டு திருமணம் செய்த பெண் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுவரை புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், சோட்டு திருமணம் செய்த பெண்கள் புகாரளிக்கும் பட்சத்தில், விசாரணை நடத்துவோம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இசைக்குழுவில் பாடகராக இருந்து வரும் சோட்டு குமார், கச்சேரி செய்ய செல்லும் இடத்தில் எல்லாம் பெண்களுடன் பழகி திருமணம் செய்து பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

பல பகுதிகளில் சுமார் 6 பெண்கள் வரை திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொண்ட வாலிபர் தொடர்பான செய்தி தற்போது கடும் அதிர்ச்சியை இந்திய அளவில் உண்டு பண்ணி உள்ளது.

Also Read | "அது அவன் கொடுத்த மோதிரம்".. ஷ்ரத்தா இறந்த பின்... வீட்டுக்கு வந்த அஃப்தாப் Girl Friend.. பகீர் கிளப்பும் புதிய தகவல்!!

BIHAR, MAN, MARRIED, WOMEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்