'தலைவன் ஆம்பள படம் பாத்திருப்பாரோ'... 'எப்படி சாத்தியம், குழம்பிய நெட்டிசன்கள்'... வைரலான போட்டோவின் பின்னணி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இணையத்தில் கடந்த சில நாட்களாக வலம் வந்த புகைப்படத்தைப் பார்த்துக் குழம்பிய நெட்டிசன்களுக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

இந்தியர்களுக்கு எஸ்யூவி ரக கார்கள் மீது தனி ஈர்ப்பு எப்போதும் உண்டு. அதிலும் மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான காராக ஸ்கார்பியோ எப்போதும் இந்தியர்களின் விருப்பமாக இருக்கும். இதனை பறைசாற்றும் வகையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மீதிருக்கும் அளவு கடந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக ஓர் நபர், அக்காரின் உருவத்தை வீட்டின் மொட்டை மாடி பகுதியில் நிறுவியிருக்கின்றார்.

பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் சேமிப்பு தொட்டி பிளாஸ்டிக் அல்லது சதுரங்க கான்கிரீட் ஆகியவற்றினாலே அமைக்கப்படுகின்றது. ஆனால் பீஹார் மாநிலம், பஹகல்பூர் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மஹிந்திரா ஸ்கார்பியோ வடிவிலான தண்ணீர் சேமிப்பு தொட்டியைத் தனது வீட்டின் மேல் பகுதியில் நிறுவியிருக்கின்றார். இது அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன ஆர்வலர்களை இந்த வீடு வெகுவாக கவர்ந்ததை அடுத்து, கார் மற்றும் வீடுகுறித்து புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

இந்த வீட்டின் உரிமையாளரின் பெயர் இன்டாசர் அலாம் மிகப்பெரிய வாகன பிரியர் என அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அவர் தனது வீட்டின் தண்ணீர் தொட்டியை மஹிந்திரா கார் உருவத்தில் உருவாக்கியிருக்கின்றார். துளி கூட அச்சுபிசுகாமல் உண்மையான மஹிந்திரா ஸ்கார்பியோ காரை மொட்டை மாடியில் நிறுத்தி வைத்திருப்பதைப் போன்று அது காட்சியளிக்கின்றது.

முதலில் நெட்டிசன்கள் பலரும் உண்மையில் காரை தான் மேலே கொண்டு நிறுத்தியிருக்கிறார்கள் என எண்ணிய நிலையில், தற்போது அதற்கான விடை கிடைத்திருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்