"விஷம் இருக்காதுன்னு நெனச்சன்.. ஆனா தலை சுத்திடுச்சு".. கடிச்ச பாம்புடன் ஹாஸ்ப்பிட்டலுக்கு போன நபர்.. லாஸ்ட்ல ஒன்னு சொன்னாரு பாருங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீஹார் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் ஒருவர். இதனால் அங்கு இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Also Read | இவ்வளவு பெரிய கப்பல்ல இருக்கும் குட்டி அறை.. சுவாரஸ்ய பின்னணியை வெளியிட்ட பெண் ஊழியர்..!
பீஹார் மாநிலத்தின் பீகார்ஷரீஃப் மாவட்டத்தில் உள்ளது கோரை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த அமன் என்பவர் விவசாய வேலை செய்துவருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கமாக தனது வயல்வெளிக்கு சென்ற அமன், வேலைகளில் ஈடுபட்டிருந்த போது, அவரை பாம்பு ஒன்று கடித்திருக்கிறது. இருப்பினும் அது விஷமில்லாத பாம்பு என நினைத்து, அதனை பிடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார் அமன். ஆனால் நேற்று இரவு அமனுடைய உடல்நிலை மோசமாகியுள்ளது. இதனையடுத்து அவரை அருகில் உள்ள சதார் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்ந்துள்ளனர்.
அதிர்ந்துபோன மருத்துவர்கள்
தனது உறவினர்களுடன் சதார் மருத்துவனைக்கு சென்ற அமன் தன்னை கடித்த பாம்பையும் எடுத்துச் சென்றிருக்கிறார். மருத்துவர்கள் முன்னிலையில், அதனை காட்டி இதுதான் தன்னை கடித்தது எனச் சொல்லவே, பாம்பை பார்த்தவுடன் அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மருத்துவமனையே பரபரப்பாக மாறியது. அதன்பிறகு பாம்பை உடனடியாக பிடிக்கும்படி மருத்துவர்கள் கூறியதை அடுத்து அமன் அந்த பாம்பை பிடித்துள்ளார்.
எந்த பாம்பு?
இதுபற்றி பேசிய அமன்,"அது விஷப்பாம்பா இல்லையா என்று சந்தேகப்பட்டேன். ஆனாலும், அதைக் கைப்பற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்றேன். நள்ளிரவில் எனது உடல்நிலை மோசமடைந்தது. தலை சுற்றுவது போல் இருந்தது. உடனடியாக எனது குடும்பத்தினர் என்னை சதார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாம்பு கடித்தது தெரிய வந்ததும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த டாக்டர்கள் உடனடியாக எந்த பாம்பு என்று கேட்டனர். பிறகு பையில் இருந்த பாம்பை இழுத்து அவர்கள் மேஜையில் வைத்தேன்" என்றார் கூலாக.
மேலும், மருத்துவர்களையோ, நோயாளிகளையோ அச்சமூட்டுவது தன்னுடைய நோக்கமில்லை எனவும், உரிய சிகிச்சையை பெறுவதற்காகவே இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார் அமன். தற்போது நார்மல் வார்டில் இருக்கும் அமன் இன்னும் சில தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read | காட்டுக்குள்ள விறகு பொறுக்க போன பெண்.. மண்ணுக்குள் பளபளத்த கல்.. ஒரே நாளில் லட்சாதிபதியான சுவாரஸ்யம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மகன் பிறந்துட்டான்னு குஷில இப்படி ஒரு பெயர் வச்சுட்டோம்.. அதுவே இப்போ சிக்கலா ஆகிடுச்சு".. தவிக்கும் பெற்றோர்.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்..!
- "இன்னும் 48 மணி நேரம் தான் உயிரோட இருப்பீங்க.." சோகத்தில் ஆழ்ந்த இளைஞர்.. கடைசி நேரத்தில் மனம் உருக வைத்த 'சர்ப்ரைஸ்'!!
- "சாக்ஸையும் கழட்டுங்க".. விமான பயணி மீது வந்த சந்தேகம்.. செக் பண்ண ஆபிசரே அரண்டு போய்ட்டாரு.. தீயாய் பரவும் வீடியோ..!
- "என்னது, 22 வருஷமா குளிக்காம இருக்காரா??.." மிரண்டு போன மக்கள்.. "எல்லாத்தையும் விட அந்த சபதம் தான் முக்கியமாம்.."
- "வேலைக்கு சேர்ந்தா அங்க தான்.." 39 முறை பிரபல நிறுவனத்தில் முயற்சி... கடைசியில் வாலிபருக்கு காத்திருந்த 'சர்ப்ரைஸ்'
- தலைக்கு மேல கடன்.. வீட்டை வித்துடுலாம்ன்னு ரெடி ஆன தம்பதி.. சரியா 2 மணி நேரத்துக்கு முன்னாடி நடந்த 'அதிசயம்'!!
- தந்தை இறந்த அதே நாளில்... மருத்துவமனையில் பிறந்த மகன்.. கதறித் துடித்த தாய்.. மனதை ரணமாக்கும் துயரம்
- "பொண்டாட்டி'ய Tour-க்கு கூப்ட்டு போக முடியலயே.." வேதனைப்பட்ட கணவர், கடைசியில் எடுத்த அதிரடி ஐடியா.. "இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா??"
- "நடு ராத்திரி தான் கரெக்ட்டான டைம்..".. அப்பாவுக்கே ஸ்கெட்ச் போட்ட மகன்..எல்லாம் முடிஞ்சதுன்னு நினைக்கும்போது போலீசுக்கு வந்த சந்தேகம்..!
- நைட்ல போன் பேசிய கணவனை இழந்த பெண்... சந்தேகப்பட்டு கொழுந்தன் செஞ்ச விபரீதம்.. அதிர்ச்சியில் உறைந்துபோன உறவினர்கள்..!