திருமண மேடையில்.. மாலை மாற்றிய சில நிமிடங்களில் மாப்பிள்ளைக்கு நடந்த துயரம்!!.. DJ சத்தம் தான் காரணமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீப காலமாகவே திருமணத்தை சுற்றி ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவது பற்றி நிறைய செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம்.

                           Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

ஒரு பக்கம் திருமணத்திற்கான அழைப்பிதழ்கள், போட்டோ ஷூட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மிகவும் புதுமையான வழியில் செய்து அதனை இணையங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம், திட்டமிட்டது போல திருமண நிகழ்வு நடக்கும் சமயத்தில் ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்து அந்த நாளையே அப்படி புரட்டி போடும்.

திருமண மேடையில் பரபரப்பு

சமீபத்தில் கூட குடித்து விட்டு மாப்பிள்ளை மேடை ஏறியதால் அவரை மணப்பெண் திருமணம் செய்ய மறுத்திருந்தார். இதன் பின்னர், அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதே போல, திருமண நாளன்று வரதட்சணை பெயரில் சண்டை உருவாகிய செய்தியும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தற்போது திருமண மேடையில் நடந்த எதிர்பாராத சம்பவம் குறித்த செய்தி தான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners

கோலாகல திருமணம்

பீகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தர்வா என்ற கிராமம். இங்கே சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சுரேந்திர குமார் என்ற வாலிபருக்கு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் இருந்துள்ளது. குதிரை ஊர்வலம் உள்ளிட்டவற்றுடன் கோலாகலமாகவும் இந்த திருமணம் நிகழ்ந்துள்ளது.

பாட்டு சத்தத்தால் எரிச்சல்?

அப்படி இருக்கையில், DJ சத்தம் மற்றும் இளைஞர்கள் ஆரவாரத்தால் மணமகன் சுரேந்திர குமார் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சத்தத்தை குறைக்குமாறும் சுரேந்திர குமார் கோரிக்கை வைத்துள்ளார். மாப்பிள்ளை கூறியும் யாரும் சத்தத்தை குறைக்கவில்லை என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners

அப்போது தான் யாரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளது. மணப்பெண்ணின் கழுத்தில் மாலையை அணிவித்த சுரேந்திர குமார், அடுத்த சில நிமிடங்களில் மேடையிலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டதும் உறவினர்கள் பதறிப் போகவே, உடனடியாக சுரேந்திர குமாரை மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு சேர்த்துள்ளனர்.

மணமகனுக்கு நேர்ந்த துயரம்

ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாட்டு சத்தத்தின் அதிர்ச்சியில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அதன் தாக்கமாக சுரேந்திர குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

மாலையை மாற்றி கொண்ட பிறகு மேடையில் இருந்த மணமகன் சுரேந்திர குமார் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

GROOM, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்