"37 லட்சம் வரி பாக்கி இருக்கு".. கூலி தொழிலாளிக்கு வந்த நோட்டீஸ்.. திடுக்கிட வைக்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு, வருமான வரித்துறையில் இருந்து வந்த நோட்டீஸ் ஒன்றால் கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | Interview'ல பெண்ணிடம் கேட்கப்பட்ட ஒரு 'கேள்வி'.. இழப்பீடு வழங்கிய பிரபல பீட்சா நிறுவனம்!.. "அப்படி என்ன கேட்டாங்க?"

பீகார் மாநிலம், சுகாரியா மாவட்டம், மஹானா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கிரிஷ் யாதவ். கூலி தொழிலாளியான இவர், ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை ஊதியம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் ஒன்றை கிரிஷ் யாதவுக்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அந்த நோட்டீஸில் என்ன இருக்கிறது என்பதை பார்த்த கிரிஷ், ஒரு நிமிடம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். இதற்கு காரணம், அதில் 37.5 லட்சம் வரி பாக்கியை கிரிஷ் செலுத்தும் படி குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனை அறிந்ததும் நமக்கு எப்படி இவ்வளவு லட்சம் பணம் வரியாக வந்துள்ளது என்பதை அறிந்து கிரிஷ் குழம்பி போனார்.

இது தொடர்பாக, அலாலி காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் கிரிஷ் யாதவ் கொடுத்துள்ளார். இதனையடுத்து, இது பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், கிரிஷ் யாதவ் பெயரில் மோசடி நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது. டெல்லியில் பணிபுரிந்து வரும் கிரிஷ், சில ஆண்டுகளுக்கு முன் தரகர் ஒருவர் மூலம், பான் கார்டு பெற முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால், அதன் பின்னர் அந்த தரகரிடம் இருந்து எந்தவித தகவலும் கிரிஷுக்கு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மற்றொரு அதிர்ச்சி தகவலாக கிரிஷ் யாதவ் ராஜஸ்தானில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் வருமான வரித்துறை நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ராஜஸ்தான் சென்றதே இல்லை எனக் கூறும் கிரிஷ் யாதவ், அப்போது எப்படி நான் அங்கே பணி செய்திருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

இதன் காரணமாக, கிரிஷ் யாதவ் பான் கார்டு மூலம், அதனை யாரோ தவறாக பயன்படுத்தி மோசடி வேலைகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சம்மந்தப்பட்ட அந்த தரகரையும், கிரிஷின் பான் கார்டை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரையும் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

Also Read | கணவர் விஷயத்தில்.. காதலனுடன் சேர்ந்து 'மனைவி' போட்ட திட்டம்.. "அந்த ஒண்ணே ஒண்ணு நடந்ததால எல்லாம் தலகீழ மாறிடுச்சு"

BIHAR, DAILY WAGER, BILL, INCOME TAX

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்