பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா.. பரபரப்பான அரசியல் களம்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் முதல்வர் பொறுப்பில் இருந்து, நிதிஷ் குமார் இன்று (09.08.2022) ராஜினாமா செய்துள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "மணமகன் விற்பனைக்கு?!.." 700 வருஷமா follow பண்ணும் சுவாரஸ்ய 'சடங்கு'.. வைரலாகும் மாப்பிள்ளை மார்க்கெட்!!

பீகாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, தற்போது ஆட்சி செய்து வருகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் பாஜக மேலிடத்திற்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல, பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்து வந்த நிலையில், தற்போது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவும் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார்.

முன்னதாக, தனது கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை ஒன்றையும் நிதிஷ் குமார் இன்று நடத்தி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில், பீகார் கவர்னர் பாகு சவுகானிடம் தனது ராஜினாமா கடிதத்தினை நிதிஷ் குமார் அளித்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எடுத்துள்ள முடிவு, இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது.

பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் இரண்டு ஆண்டு கால ஆட்சி, தற்போது பீகாரில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், நிதிஷ் குமாரின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

Also Read | பாலத்துக்கு அடியில்.. துணி குவியலுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்.. ஸ்பாட்'ல போய் விசாரிச்ச போலீஸ்.. "அப்படியே கேஸ் ட்விஸ்ட் ஆயிடுச்சு.."

BIHAR, BIHAR CM, BIHAR CM NITISH KUMAR, BIHAR CM NITISH KUMAR RESIGNS, GOVERNOR, பீகார் முதல்வர், நிதிஷ் குமார்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்