உதயநிதி ஸ்டைலில் களமிறங்கிய வட மாநில இளைஞர்கள்!.. 'எய்ம்ஸ்' செங்கலுடன் வீடு வீடாக பிரச்சாரம்!.. தீவிரமடையும் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சட்டப்பேரவை தேர்தலின் போது கையில் எய்ம்ஸ் செங்கலுடன் திமுக இளைஞரின் செயலாளர் உதயநிதி போட்ட மேற்கொண்ட பிரச்சாரம் பீகாரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பீகார் மாநிலம் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதம் ஆவதை கண்டித்து அப்பகுதி மக்கள் செங்கற்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய மத்திய நிதி அமைச்சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லீ பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்த மத்திய அரசு, 2020ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பே கட்டப்படும் என்றும், 2024ம் ஆண்டுக்குள் திறக்கப்படும் எனவும் அறிவித்தது.

ஆனால், இதுவரை அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையை தர்பங்காவில் அமைக்க அரசுக்கு நெருக்கடி கொடுத்து அடிக்கல் நாட்டு விழா நடத்த மாணவர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வீடு வீடாக சென்று செங்கலை சேகரிக்கும் வேலையில் களம் இறங்கியுள்ள மாணவர் சங்கத்தினரும், சிறப்பான மருத்துவ சேவை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அப்பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஒரு லட்சம் செங்கற்களை சேகரித்த உடன் அதனை மத்திய அரசுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 'எய்ம்ஸ்' என எழுதப்பட்ட செங்கற்கள் வீடு வீடாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30,000 செங்கற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பீகாரில் நடைபெறும் இந்த நூதன போராட்டத்திற்கு வித்திட்டது எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தான். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது கையில் எய்ம்ஸ் செங்கலுடன் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், அந்த செங்கலை முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்தார்.

பீகாரை போல தமிழகத்தின் மதுரையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இடம் தேர்வு செய்ததுடன் அந்த பணிகள் முடங்கியுள்ளன. இதற்கிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியாது என்று மத்திய அரசு சமீபத்தில் பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்