'சாப்பாட்ட விழுங்க முடியல டாக்டர்...' 'எக்ஸ்ரே எடுத்து பார்த்தப்போ, உள்ள...' - அவர் சொன்ன பதிலை கேட்டு ஆடி போன மருத்துவர்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபோபாலில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு பிரிவான காது-மூக்கு-தொண்டை துறை, 32 வயதான நபர் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர் இரண்டு நாட்களாக தன்னால் எதையும் சாப்பிட முடியவில்லை என்றும் விழுங்கும் போது கடுமையான வலி ஏற்படுவதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
உடனடியாக ENT, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை குழுவால் அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டத்தில், அவரது கழுத்து மற்றும் மார்பில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில், கழுத்து பகுதியில் கத்தி மற்றும் ஒரு பேனா ரீபில் இருந்தது கண்டுபிடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவக்குழு உடனடியாக அவருக்குண்டான சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து நோயாளியிடம் விசாரித்த மருத்துவக்குழு, இரண்டு நாட்களுக்கு முன்பு சமையலறை கத்தியை விழுங்கியதாக கூறியுள்ளார். அவர் விழுங்கிய கத்தி சுமார் 14 செ.மீ நீளமும் 3.5 செ.மீ அகலமும் கொண்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ENT அறுவை சிகிச்சை குழுவுக்கு டாக்டர் விகாஸ் குப்தா டாக்டர் கணகல்யன் பெஹெரா, டாக்டர் ஷ்ரே மற்றும் டாக்டர் சந்தீபன் மற்றும் டாக்டர் பிரின்ஸ் ஆகியோருடன் தலைமை தங்கியுள்ளார். மயக்க மருந்து குழுவுக்கு டாக்டர் மனிதா, டாக்டர் அதிதி, டாக்டர் அகில், மற்றும் டாக்டர் ரியா ஆகியோருடன் டாக்டர் ரிதிகா தலைமை தாங்கி வெற்றிகரமாக அறுவைசிக்கிச்சையை முடித்துள்ளனர்.
இவர் மனநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து மனநோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்ததாகவும், மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஆல்கஹால், பீடி, குட்கா, கஞ்சா ஆகியவற்றிற்கும் அடிமையாக இருந்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர். மேலும் 2 வருடங்களுக்கு முன்னதாக இவர் விழுங்கிய சில பொருட்கள் அவரது வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அறுவை சிகிச்சை எல்லாம் தேவையில்லை'... 'ஒரு சட்டி பழைய சோறு போதும்'... அசத்தும் சென்னை அரசு மருத்துவர்கள்!
- ‘கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததும்’... ‘இவங்களுக்குத்தான் முதல்கட்டமாக வழங்க திட்டம்’... ‘தீவிரமாக தயாராகும் பணிகள்’... ‘வெளியான தகவல்’...!!!
- 'இதயத்துடிப்பு நின்றுபோன சிறுவன்'!.. நொறுங்கிப் போன குடும்பத்துக்கு... 3 நாட்கள் கழித்து வந்த 'சர்ப்ரைஸ்'!.. மருத்துவமனையில் நெகிழவைக்கும் பாசப்போராட்டம்!
- “உங்களால பீஸ் கட்ட முடியலனா.. நாங்களே ஐடியா தர்றோம்!”.. 'மகப்பேறு' சிகிச்சைக்கு பின் 'மருத்துவமனை' போட்ட 'டீல்!'... பெற்றோர்கள் செய்த 'அதிர்ச்சி' காரியம்!
- 'திடீரென அதிகரித்துக்கொண்டே போன பெண்ணின் எடை'... 'இப்படி நாங்க பாத்ததே இல்லை'... 'பரிசோதனைக்கு பின் அதிர்ந்துநின்ற மருத்துவர்கள்!'...
- 'அப்பா...! பல்ல விழுங்கிட்டேன்...' 'வயித்துல போயிருக்கும் என அசால்ட்டா இருந்த பெற்றோர்...' - ஸ்கேன் எடுத்து பார்த்து அதிர்ச்சியான டாக்டர்கள்...!
- 'உசுர' குடுத்து போராடுறாங்க... 'மருத்துவர்கள்', 'செவிலியர்'களுக்கு ஆஃபர் அறிவித்த... 'விமான' நிறுவனம்!
- "கொரோனாவுல நல்ல வேட்டை!"... 'டிப்டாப்' உடை.. கிராம மக்கள் 'டார்கெட்'.. ஒரே நாளில் சிக்கிய 22 போலி டாக்டர்கள்!
- 'ஹனிமூன் கூட கேன்சல்'... 'உங்கள பாத்தா பொறாமையா இருக்கு'... பலரையும் நெகிழ வைத்த இளம் தம்பதி!
- 'திடீரென அலறிய சிறுவன்'... 'காது வழியாக வந்த கம்பி'... 'கண்ணு ஒண்ணும் இல்லடா'... வாவ் போட வைத்த அரசு மருத்துவர்கள்!