என்னது ரூ.10 கோடியில் டைனிங் டேபிளா? பூகம்பமாக வெடித்த சர்ச்சை.. தொழிலதிபர் கொடுத்த விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பத்து கோடி ரூபாய்க்கு டைனிங் டேபிள் பயன்படுத்துவதாக எழுந்த சர்ச்சைக்கு பாரத்பே முன்னாள் நிர்வாக இயக்குனர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களில் ஒன்றான, ‘பாரத்பே’ நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் அஷ்னீர் குரோவர். இவர் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார். இவருடைய மனைவி மாதுரி ஜெயின் குரோவர். இவர் பாரத்பே நிர்வாக குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இவர் தனது நிறுவனத்தின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், பங்கு சந்தையில் ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் இவர் தனது வீட்டில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள டைனிங் டேபிளை செய்து, கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மாதுரி ஜெயின் குரோவரும், அஷ்னீர் குரோவரும் தங்கள் பதவிகளில் இருந்து விலகினர்.

இந்த நிலையில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள டைனிங் டேபிள் சர்ச்சைக்கு அஷ்னீர் குரோவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘இதைப் படிக்கும்போது சிரிப்பு தான் வருகிறது. நான் கின்னஸ் சாதனை படைத்த டைனிங் டேபிளை வைத்திருக்கவில்லை. சிலர் திட்டமிட்டு பொய் தகவலை பரப்புகின்றனர். அதை ஊடகங்களும் செய்தியாக வெளியிடுகின்றன.

இவ்வளவு விலை உயர்ந்த டைனிங் டேபிளை வாங்குவதற்கு பதிலாக, 10 கோடி ரூபாயை தொழிலில் முதலீடு செய்திருப்பேன். அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைத்திருக்கும். பாரத்பே நிர்வாக குழுவில் இருந்து வெளிவரும் பொய்யான தகவல்களை நம்பாதீர்கள். அப்படி செய்தால், நீங்களும் அவர்களை போலவே நம்பகத்தன்மையை இழந்து விடுவீர்கள்’ என கூறியுள்ளார். மேலும், இதனுடன் தனது வீட்டில் பயன்படுத்தப்படும் டைனிங் டேபிளின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

BHARATPE, ASHNEERGROVER, DININGTABLE

மற்ற செய்திகள்