திருமணத்தை நிறுத்த பெண் ‘இன்ஜினியர்’ கூறிய காரணம்... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியத்தால்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற ‘மாப்பிள்ளை’...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாப்பிள்ளையின் மூக்கு பெரிதாக இருப்பதாகக் கூறி பெண் இன்ஜினியர் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு கோரமங்களாவைச் சேர்ந்தவர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவருக்கு திருமண இணையதளம் ஒன்றின் மூலமாக அதே துறையில் வேலை செய்யும் ராஷ்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ராஷ்மி அமெரிக்காவில் வேலை செய்து வரும் நிலையில்,  இருவரும் பேசிப் பழகி, பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரு வந்த ராஷ்மி மற்றும் அவருடைய சகோதரி லட்சுமி  இருவரும் ரமேஷை சந்தித்துப் பேசியுள்ளனர். அதன் பின்னர் ரமேஷின் பெற்றோரும், ராஷ்மியின் பெற்றோரும் சந்தித்து திருமணம் குறித்து பேசி முடிவு செய்துள்ளனர். அதன்படி செப்டம்பர் மாதம் ரமேஷுக்கும், ராஷ்மிக்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, ஜனவரி 30ஆம் தேதி திருமண தேதியும் குறிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திருப்பதியில் திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு, அங்கு வரும் உறவினர்கள் தங்குவதற்காக 70 அறைகள் முன்பதிவு செய்வதற்கென ரூ 1 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டு, சமையல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ 4 லட்சத்துக்கு ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவையும் வாங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ராஷ்மி, “எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணத்தை நிறுத்தி விடுங்கள்” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை ரமேஷ் திருமணத்தில் ஏன் விருப்பமில்லை என்பதற்கான காரணத்தை அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு ராஷ்மி, “உங்களுடைய மூக்கு பெரிதாக உள்ளது. அதனால் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை" எனக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்துபோய் நின்ற ரமேஷ், தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது மூக்கின் தோற்றத்தை மாற்றிக்கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனாலும் தன் முடிவிலிருந்து மாறாத ராஷ்மி திருமணத்தை நிறுத்துமாறு உறுதியாகக் கூறியுள்ளார். பின்னர் அவர் ரமேஷின் செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதுபற்றி ராஷ்மியின் குடும்பத்தினரும் ரமேஷிற்கு சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். 

இதனால் மனம் உடைந்த அவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததற்காக ராஷ்மி, லட்சுமி மற்றும் அவர்களுடைய தந்தை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இதேபோல ராஷ்மி வேறு சிலரையும் ஏமாற்றி இருக்கலாம் எனவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் ராஷ்மி, லட்சுமி மற்றும் அவர்களுடைய தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

KARNATAKA, TECHIE, MARRIAGE, WOMAN, GROOM, NOSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்