காபி போட்டு தர மறுத்த மனைவி.. கணவன் செய்த வெறிச்செயல்!.. பெங்களூருவில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரில் காபி போட்டு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தொழிலதிபர், மனைவி மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு புறநகர் தொட்டப்பள்ளப்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபரின் மனைவி காவ்யா(வயது 34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது ஊரடங்கால் தொழில் அதிபர் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளார். இந்தநிலையில் அவர் தனது மனைவி காவ்யாவிடம் காபி போட்டு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் காவ்யா, காபி போட்டு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சமையல் அறையில் இருந்த வெந்நீரை எடுத்து காவ்யா மீது ஊற்றினார்.
இதனை எதிர்பாராத காவ்யா, வெந்நீரின் சூட்டை தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் காவ்யாவை மீட்டு தொட்டப்பள்ளப்புரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காவ்யா லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் காவ்யா பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் உள்ள சகாயவாணி பெண்கள் பாதுகாப்பு மையம் தலைவி ராணிஷெட்டியிடம் கணவர் மீது புகார் அளித்தார்.
அதன்பேரில் அவர் தொட்டப்பள்ளப்புரா போலீசை தொடர்பு கொண்டு காவ்யா கணவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மருந்து இல்ல; ஆனா நோய் எதிர்ப்புச் சக்திக்காக இத குடிங்க!’.. 'அரசே வழங்கும்!'.. முதல்வர் அதிரடி!
- விலங்குகளையும் அச்சுறுத்தும் கொரோனா!.. 4 புலிகள், 3 சிங்கங்களுக்கு தொற்று உறுதி!.. பதபதைக்க வைக்கும் பின்னணி!
- ‘2020 வது வருஷம் இறுதி வரைக்குமா?’.. ‘ஸ்ட்ரிக்டாக’ அறிவித்த பிரிட்டன் அரசு!
- உலக நாடுகளில் 'உண்மையான' உயிரிழப்பு எண்ணிக்கை... எவ்வளவு 'அதிகமாக' இருக்க 'வாய்ப்பு?'... அறிக்கை கூறும் 'புதிய' தகவல்...
- 'ஏம்பா... ஏதோ ட்ரம்ப் மாத்திரையாம்ல!?'.. மருந்துக்கடையை 'கார்னர்' செய்யும் மக்கள்!.. திக்குமுக்காடும் ஊழியர்கள்!.. என்ன நடந்தது?
- 'மலிவு விலை' கொரோனா 'பரிசோதனை'... 'ஒரு மணி' நேரத்தில் 'துல்லியமான முடிவு...' பரிசோதனைக்கு வைத்த 'பெயர் தான் ஹைலைட்டே...!'
- 'வர ஞாயிற்றுக்கிழமை அட்சய திருதியை'... 'கவலப்படாதீங்க தங்கம் வாங்க வழி இருக்கு'... நகைக்கடைகளின் அதிரடி ஐடியா!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'பலி எண்ணிகைய மட்டும் பாத்தா போதுமா!?'.. அசரவைத்த கொரோனா தரவுகள்!.. இந்திய மருத்துவ கவுன்சில் பரபரப்பு கருத்து!
- 'அழகை விட உயிரே முக்கியம்...' 'வேறு' வழியில்லாமல் 'ஜப்பான் அரசு...' செய்த 'திகைக்கச் செய்யும்' காரியம்...