Weekend'ல Rapido பைக் ஓட்டும் ஐடி ஊழியர்.. அவர் சொன்ன காரணம் கேட்டு.. மெர்சலான நெட்டிசன்கள்.. "ப்பா, எவ்ளோ பெரிய மனசு!!"
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில், நகரப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள்,ஓலா, உபேர், ராபிடோ உள்ளிட்ட கேப் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்தி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
அந்த வகையில், இளைஞர் ஒருவர், Rapido மூலம் பைக் ஒன்றை புக் செய்து பயணம் மேற்கொண்ட நிலையில், தனது பயணம் பற்றி அவர் பதிவிட்ட ட்வீட் ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ள ட்வீட்டின் படி, அந்த நபரின் பெயர் நிகில் சேத் என்பது தெரிய வருகிறது.
மேலும், பெங்களூரு பகுதியைச் சேர்ந்த அந்த நபர், Rapido மூலம் தனக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு பைக் ஒன்றையும் புக் செய்துள்ளார். வழக்கமாக, இது போன்று வாகன சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், சில நேரம் அந்த ஓட்டுநர்களுடன் ஏதாவது பேசிக் கொண்டே வருவார்கள். அப்படி இந்த ட்விட்டர்வாசியான நிகில் என்பவரும், தான் புக் செய்த பைக்கின் ஓட்டுநருடன் பேச முற்பட்டுள்ளார்.
அப்போது, அவருக்கு இரண்டு ஆச்சரியங்கள் காத்திருந்தது. அதாவது அந்த வாகன ஓட்டுனர் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் என்பது தான் முதல் ஆச்சரியமான செய்தி. பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல நகர பகுதிகளில், இது போன்று மற்ற வேலை செய்யும் நபர்கள், பார்ட் டைமாகவும் வாகனம் ஓட்டி பணம் சம்பாதிப்பார்கள்.
ஆனால், வாகனம் ஓட்ட ஏதாவது காரணம் இருக்கிறதா என நிகில் கேட்க, அந்த வாகனம் ஓட்டி வந்த நபர் சொன்ன பதில், நிகிலுக்கு இரண்டாவது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அது மட்டுமில்லாமல், இணையத்தில் பலரும் இந்த பதிலால் நெகிழ்ந்து போயுள்ளனர். அதாவது, வார இறுதியில் மக்களுடன் பேச வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில், பொழுது போக்காக தான் வாகனம் ஓட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை நெகிழ்ந்து போய், நிகில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, நெட்டிசன்களும் ஹார்ட்டுகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். இன்றைய காலத்தில் பலரும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் நிலையில், மக்களிடம் பேசுவதற்காக வார இறுதியில் வாகனம் ஓட்டுவதாக சாஃப்ட்வேர் இன்ஜினியர் சொன்ன தகவல் தான், தற்போது இணையத்தில் ஹைலைட்டான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்யாண வீட்டுல கேட்ட பயங்கர சத்தம்.. மணப்பெண்ணின் நண்பர் செஞ்ச விபரீதத்தால் சோகத்தில் முடிந்த திருமணம்..!
- Laptop-ல் வேலை பார்த்துக் கொண்டிருந்த IT இளம்பெண்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. Work from home-ல் நடந்த அதிர்ச்சி..!
- ஒரே QR கோட்.. மொத்த பணமும் காலி...OLX-ல் பழைய சாமானை விற்க முயற்சித்த இளைஞருக்கு காத்திருந்த ஷாக்..!
- 'டேட்டிங் ஆப்பில் இளம்பெண் வச்ச கோரிக்கை'... 'ஒரு செகண்ட் யோசிக்காமல் இளைஞர் கொடுத்த போஸ்'... 'உடனே வந்த மெசேஜ்'... ஐடி இளைஞரை கதிகலங்க வைத்த இளம்பெண்கள்!
- 'தாலியின் ஈரம் கூட காயல'... '5 நாளில் தெரிய வந்த சாப்ட்வேர் மாப்பிள்ளையின் உண்மை முகம்'... போட்டோவுடன் போட்டுக்கொடுத்த உறவினர்!
- சினிமாவை மிஞ்சிய 'ஹைடெக்' கும்பல்... 'பகீர் சம்பவத்திற்கு பின்னிருந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்!'... 'அடுத்தடுத்து வெளியான அதிரவைக்கும் தகவல்கள்!!!...
- 'வெள்ளை மாளிகையில் ஜொலித்த பட்டு புடவை'... 'இந்திய சாப்ட்வேர் இன்ஜீனியருக்கு அடித்த ஜாக்பாட்'... டிரம்ப் சொன்ன குட்டி ஸ்டோரி!
- 'திருமணம் ஆன ஒரே ஆண்டில்'... 'காதல் கணவர் செய்த காரியம்'... 'ஐடி ஊழியருக்கு நேர்ந்த துயரத்தால் கதறித் துடிக்கும் பெற்றோர்'...
- 'உங்களை வேலைய விட்டு தூக்கியாச்சு'... 'மெயில் வரும்'... 'காய்கறி விற்ற ஐடி என்ஜினீயர்'... எதிர்பாராமல் வந்த சர்ப்ரைஸ்!
- 'சொந்த வீடு வாங்கிட்டானே, பொண்ணு பாக்க ஆரம்பிச்சோம்'... 'Work From Home செஞ்ச ஐடி ஊழியர்'... ஒரே நிமிடத்தில் நடந்து முடிந்த பயங்கரம்!