போர்வை போர்த்தியபடி நின்ற கார்.. முன்பக்கம் இருந்த கடிதம்.. பீதியில் உறைந்த பெங்களூர்!!.. திடுக்கிடும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூர் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் எடுத்த முடிவு தொடர்பான செய்தி, தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அன்னைக்கு மிஸ் தமிழ்நாடு, இப்போ மிஸ் இந்தியா போட்டியில".. தடைகள் தாண்டி தடம் பதித்த தமிழக கட்டிட தொழிலாளி மகள்!!

பெங்களூரு பகுதியை அடுத்த மகாலட்சுமி லேஅவுட் என்னும் இடத்தை சேர்ந்தவர் விஜய் குமார் (வயது 52). இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஐடி ஊழியராகவும் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, இருதய நோயாளியாகவும் இருந்து வந்த விஜய் குமார், தனது உடல்நிலை காரணமாக கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அப்படி ஒரு சூழலில், கடந்த சில தினங்கள் முன்பாக வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதாக கிளம்பி சென்ற விஜய் குமார், அலுவலகத்திற்கு செல்லவில்லை என்றும் தெரிகிறது. அப்படி இருக்கையில், பூங்கா ஒன்றின் அருகே தனது காரை நிறுத்திய விஜய், அதனை போர்வை ஒன்றின் மூலம் முழுவதும் மூடியதாகவும் சொல்லப்படுகிறது.

அதே போல, நச்சு நிறைந்த நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் ஒன்றையும் கொண்டு வந்த விஜய், காரை முழுவதும் போர்வை கொண்டு போர்த்திய பிறகு காரின் பின் இருக்கையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சிலிண்டரை திறந்ததும் கார் முழுவதும் நைட்ரஜன் வாயு நிறைந்து கொள்ள அதில் சிக்கி சில மணி நேரங்கள் கழித்து விஜய் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இந்த நிலையில், போர்வை கொண்டு போர்த்தப்பட்ட கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நிற்பதை அறிந்து அவ்வழியே சென்ற நபர் ஒருவர் போலீசாரிடம் தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடம் வந்து காரை பார்த்த போது அதில் ஒரு குறிப்பையும் விஜய் எழுதி வைத்திருந்தது கண்டெடுக்கப்பட்டது.

அதில், விஷம் நிறைந்த வாயு காரில் நிறைந்திருப்பதால் போலீசார் மட்டும் கதவை திறந்தால் போதும் என்ற எச்சரிக்கை குறிப்பு ஒன்றையும் வைத்துள்ளார் விஜய் குமார். இதனையடுத்து, விஜய் குமார் உடலை போலீசார் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து போனதும் தெரிய வந்தது.

இதன் பின்னர் தான், விஜய் குமார் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதே போல, இணையதளம் மூலம் விபரீத முடிவை எடுக்க விஜய் குமார் வழிகள் தேடியதும் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் சில வீடியோக்கள் கண்டு அதற்கேற்ப இந்த முடிவை எடுத்துள்ளார் ஐடி ஊழியரான விஜய் குமார்.

Also Read | ஷ்ரத்தா கொலை வழக்கு : ஜாமீன் மனு தாக்கல் செய்த பிறகு.. அஃப்தாப் எடுத்த பரபரப்பு முடிவு!!

BENGALURU, CAR, NITROGEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்