‘உலகமே கொரோனாவ ஒழிக்க போராடிட்டு இருக்கு’.. ‘இந்த நேரத்துல இப்டியா பண்றது’.. சாப்ட்வேர் இன்ஜினீயர் செஞ்ச காரியம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸை பரப்புங்கள் என பேஸ்புக்கில் பதிவிட்ட சாப்ட்வேர் இன்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பலவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும், அடிக்கடி கை கழுவுதல், சுகாதாரமான உணவுகளை உண்ணதல், வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சாப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் வைரஸை பரப்புங்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வருபவர் முஜீப் முகமது. இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரஸை பரப்புவோம்’ என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுருந்தார்.

இவரது இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக போலீசார் முஜீப் முகமதை கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்