‘கொரோனா’ அறிகுறியால் பயந்து... மகனை ‘வீட்டில்’ தனிமைப்படுத்தாமல்... ‘ரயில்வே’ அதிகாரியான தாய் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... பாதிப்பு உறுதியானதால் ‘பரபரப்பு’...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மகனை முறையாக தனிமைப்படுத்தாமல் அவருடைய தாய் மறைத்துவைத்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய மகனுக்குக் கொரோனா பாதிப்பு இருந்ததை ரயில்வே அதிகாரி ஒருவர் மறைத்த சம்பவம் நடந்துள்ளது.

ரயில்வேயில் துணை மேலாளராக வேலை செய்யும் அந்தப் பெண் அதிகாரியின் மகன் சமீபத்தில் இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்று விட்டு இந்தியா திரும்பியுள்ளார். அப்போது பெங்களூரு விமான நிலையத்தில் அவர் சோதிக்கப்பட்டு, வீடு சென்றதும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பெண் அதிகாரி மகனை தன்னுடைய வீட்டில் தங்க வைத்தால் மற்றவர்களுக்கும் நோய் பரவலாம் என பயந்து, மகனுக்குக் கொரோனா அறிகுறி இருப்பதை மறைத்து ரயில்வே கெஸ்ட் ஹவுஸில் அறை புக் செய்து அங்கு அவரைத் தங்க வைத்துள்ளார்.

இதையடுத்து 5 நாட்களுக்குப் பிறகு அந்த இளைஞருக்கு சோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா அறிகுறியுடன் வந்த மகனை வீட்டில் தனிமைப்படுத்தாமல், ரயில்வே கெஸ்ட் ஹவுஸைப் பயன்படுத்தியதற்காக, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள தென்மேற்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் விஜயா, “ரயில்வே காலனியில் தன் மகனைத் தங்க வைத்து மற்றவர்கள் உயிருடன் விளையாடிய அந்த அதிகாரியின் அலட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

INDIANRAILWAYS, CORONAVIRUS, MOTHER, SON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்