அம்மாவை விட்ருங்க.. ஓடிவந்த மகன்.. மனைவியின் மீது வந்த சந்தேகத்தால் கணவர் செய்த விபரீத காரியம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மனைவியை கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூரு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

"வீட்டு செலவுக்கு ஆன்லைன்ல கடன் வாங்கிய பெண்".. அதுக்கு அப்புறம் நடந்த மிரள வைக்கும் சம்பவம்.. கோவையில் பரபரப்பு

பெங்களூரின் அப்பண்ண பாளையாவில் வசித்து வருபவர் சம்பத். இவருடைய மனைவி லாவண்யா (31). இந்த தம்பதிக்கு 12 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கூலி தொழிலாளியான சம்பத் மது அருந்தும் பழக்கம் உடையவர் எனத் தெரிகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதன் காரணமாக சமீபத்தில் லாவண்யாவின் பெற்றோர் நேரில் வந்து சம்பத்திற்கு அறிவுரை கூறிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. 

தாக்குதல்

இந்நிலையில் நேற்று காலை சம்பத் தனது மனைவி லாவண்யாவை தாக்கியதாக தெரிகிறது. இதனால் லாவண்யா சத்தம் எழுப்பவே, ஓடிவந்த அவர்களது மூத்த மகன் தனது தந்தையை தடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், மகனையும் தாக்கிய சம்பத், பிறகு தன்னை தானே தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த சம்பத், அருகில் இருந்த கழிவு நீர் வாய்க்காலில் நிலை தடுமாறி விழுந்திருக்கிறார். இதனைப் பார்த்த  பக்கத்தினர் ஓடிவந்து சம்பத்தை வெளியே எடுத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து காவல்துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விபரீதம்

தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள், வீட்டிற்கு உள்ளே சடலமாக கிடந்த லாவண்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயத்துடன் இருந்த சம்பத் மற்றும் அவரது மூத்த மகன் ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறது காவல்துறை.

விசாரணை

மது அருந்தும் பழக்கம் இருப்பதாக சொல்லப்படும் சம்பத், தனது மனைவியின் மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் இடையே சம்பத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அத்திபெலே பகுதி மக்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

"மகன் வரணும்னா 1 கோடி வேணும்"..தொழிலதிபருக்கு வந்த மிரட்டல் கால்.. மண்ட மேல இருந்த கொண்டையை மறந்த ரவுடிகள்.. அலேக்காக தூக்கிய போலீஸ்..!

BENGALURU, BENGALURU POLICE, ARREST, MAN, WIFE, ATTACK, மகன், மனைவி, கணவர், விசாரணை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்