பஜ்ஜி சுட்ட எண்ணெயில்.. 9 வருஷமா ஓடும் கார்.. வியக்க வைக்கும் வாலிபர்.. "ஐடியா'வே சும்மா அமர்க்களமா இருக்கே.."

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக, ஒரு காருக்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை போட்டு பார்த்திருப்போம். இவற்றையும் தாண்டி, தற்போது எலக்ட்ரிக் கார்களும் வந்து விட்டது.

Advertising
>
Advertising

Also Read | பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த தாய், மகன்.. கொலையாளியை பிடிக்க.. மோப்ப நாய் கொடுத்த 'Clue'.. சிக்கியது எப்படி?

ஆனால், பஜ்ஜி, வடை உள்ளிட்ட பொருட்களை சுடும் எண்ணெயை பயன்படுத்தி, கார் ஒட்டி வரும் தகவல் பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

டீக்கடை மற்றும் வீடுகளில் பஜ்ஜி, வடை உள்ளிட்ட பலகார வகைகளை உருவாக்கும் போது, மீதம் வரும் எண்ணெயை பெரிதாக அடுத்து வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது.

பஜ்ஜி சுடும் எண்ணெயில் ஓடும் கார்

ஆனால், பெங்களூரை சேர்ந்த அவினாஷ் நாராயணசாமி என்பவர், இந்த மீதம் வரும் எண்ணெயை அசத்தலான காரியம் ஒன்றிற்காக பயன்படுத்தி வருகிறார். 40 வயதாகும் இவர், தனது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஹோட்டல்களில், வடை உள்ளிட்ட பொருட்களை சுடுவதற்கு பயன்படுத்தி, மீந்து போகும் எண்ணெயை ஒரு குறைந்து விலைக்கு வாங்குகிறார். இதன் பின்னர், அந்த மீந்து போன எண்ணெயை பல்வேறு கட்டமாக சுத்திகரித்து, அதனை ஒரு எரி பொருளாகவும் மாற்றுகிறார் அவினாஷ் நாராயணசாமி.

9 வருஷமா இப்டி தான்..

இதன் படி, சுமார் 1 லிட்டர் எண்ணெயில் இருந்து 800 மி.லி வரை எரிபொருள் கிடைப்பதாகவும் அவினாஷ் தெரிவித்துள்ளார். அதனை பயன்படுத்தி, தனது காருக்கும் அவர் பயன்படுத்தி வருகிறார். இதற்கான செலவும், சுமார் 65 ரூபாய் வரை தான் ஆவதாகவும் அவினாஷ் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், தனது காருக்கு இப்படி மீந்து போன எண்ணெயை சுத்திகரித்து எரிபொருளாக மாற்றி தான் அவினாஷ் பயன்படுத்தி வருகிறார்.

மொத்தமாக, இதுவரை 1.20 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல், அவினாஷின் கார் ஓடியுள்ள நிலையில், காரின் இன்ஜினுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், லிட்டருக்கு 15 முதல் 17 கிலோ மீட்டர் வரை மைலேஜும் கிடைக்கிறது. இதனை அனைத்து டீசல் வாகனங்களிலும் பயன்படுத்த முடியும் என்றும் அவினாஷ் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மட்டுமில்ல..

மேலும், மற்ற டீசல் வாகனங்களை விட, புகையும் குறைவாக இருப்பதால், சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத பையோ எரிபொருள் என்ற சான்றிதழையும் அவினாஷ் பெற்றுள்ளார். இவை அனைத்தையும் விட, சமையல் எண்ணெயில் இருந்து, எரிபொருள் தயாரிக்கும் போது, அதில் வீணாகும் கழிவுகளை பயன்படுத்தி, கை கழுவும், வீட்டை சுத்தம் செய்யும் கிருமி நாசினி உள்ளிட்டவற்றையும் அவினாஷ் தயாரித்து வருகிறார்..

இப்படி, கடந்த 9 ஆண்டுகளாக, சுற்று சூழலுக்கு ஏற்ற வகையில் எரிபொருள் தயாரித்து கார் ஒட்டி வரும் அவினாஷை பலரும் வியந்து போய் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், "இந்தியன் புக் ஆப் ரெக்கார்டஸ்" என்ற சாதனை புத்தகத்திலும் அவினாஷ் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | "கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே கோடீஸ்வரரான புதுமாப்பிள்ளை...." ஆனந்த கண்ணீர் விட்ட மனைவி.. எப்படி.?

BANGALORE, MAN, CAR, COOKING OIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்