'ஒரே ஒரு காலில் மொத்த காசையும் இழந்த என்ஜினீயர்'... 'இப்படி கூட பணத்தை அடிக்க முடியுமா'?.... விபரீதத்தில் முடிந்த ஆசை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பேன்சி எண்ணிற்கு ஆசைப்பட்ட என்ஜினீயர் மொத்த பணத்தையும் தொலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

பெங்களூரு சிவாஜி நகரில் வசித்து வரும் சிவில் என்ஜினீயர் ஒருவரின் செல்போன் எண்ணிற்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில், தனியார் செல்போன் நிறுவனத்தில் ‘பேன்சி’ எண் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது 90999, 99999 என்று தொடங்கும் ‘பேன்சி’ செல்போன் எண் வேண்டும் என்றால் தொடர்பு கொள்ளுங்கள் என ஒரு எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பேன்சி எண் நன்றாக இருக்கிறதே என நினைத்த அந்த என்ஜினீயர், அதை வாங்க ஆசைப்பட்டார். உடனே தனக்கு குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்ட அந்த   என்ஜினீயர், எதிர் முனையில் உள்ள நபருடன் பேசினார். அப்போது, இது நல்ல பேன்சி எண், அதிகமான டிமாண்ட் இருக்கிறது என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் தான் கூறும் வங்கிக் கணக்குக்கு ரூ.64,900 அனுப்பும்படி கூறியுள்ளார்.

பேன்சி எண்ணை வாங்கும் ஆசையிலிருந்த அவர், எது குறித்தும் விசாரிக்காமல் அந்த நபர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு 64000 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். பணத்தை அனுப்பிவிட்டு அந்த நபரைத் தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதறிப் போன அவர், உடனே தனியார் செல்போன் நிறுவனத்திற்குச் சென்று விசாரித்துள்ளார். தங்களது நிறுவனம் அதுபோன்று ‘பேன்சி’ எண் தருவதாகக் கூறவில்லை என்று தெரிவித்தனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த என்ஜினீயர், கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரைத் தேடிவருகின்றனர். பேன்சி எண்ணிற்காகப் படித்த என்ஜினீயர் ஒருவர் 64000 ரூபாய் தொலைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்