என்னங்க, 'லேப்டாப்ப' கொஞ்சம் கொடுங்க.. வாட்டர்வாஷ் பண்ணனும்...! - மனைவியின் செயல்களால் 'மண்டை' காய்ந்து போன கணவன்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூர் ஆர்டி நகரில் வசிக்கும் இளைஞர் ஒருவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2009 ஆண்டு திருமணமான நிலையில்  திருமணம் முடிந்த உடனேயே, கணவர் ராகுல் மனைவியுடன் ஆன்-சைட் பணிக்காக இங்கிலாந்து சென்றனர்.

Advertising
>
Advertising

முதலில் சில வருடங்கள் கணவன் மனைவி தனித்தனியாக நீண்ட இடைவெளியில் இருப்பதால் கல்யாண வாழ்க்கை தொலைதூர காதல் வாழ்க்கை போல சுபபோகமாக இருந்துள்ளது. அதோடு அந்த இளைஞர் தன் மனைவியை இங்கிலாந்திற்கு அழைத்தும் வந்துள்ளார்.

முதலில் தன் மனைவி வீட்டை சுத்தமாக வைத்திருந்ததற்கு ராகுல் மகிழ்ச்சியில் தத்தளித்துள்ளார். அதோடு, இரண்டு ஆண்டுகளில் இவர்களுக்கு முதல் குழந்தையும் பிறந்துள்ளது. வருடங்கள் செல்ல செல்ல அந்த சுத்தமே இவர்களின் வாழ்க்கைக்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு சென்றுள்ளது.

தன் மனைவியின் அதீத சுகாதாரப் பழக்கம் கணவருக்கு எரிச்சலடைய செய்துள்ளது. வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் ஒவ்வொரு முறையும் கணவரின் உடைகள், காலணிகள் மற்றும் மொபைல் போன்களை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்துவாராம்.

சும்மாவே இவ்வளவு சுத்தம் பார்க்கும் பெண்மணி கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் கணவரை படாதப் பாடுபடுத்தியுள்ளார்.

தினமும் வீட்டில் இருந்த பொருட்களை சுத்தப்படுத்தத் தொடங்கியுள்ளார். அதோடு ஒர்க் பிரம் ஹோம்மில் இருந்த கணவரையும் சுத்தம் செய்யவைத்துள்ளார். இதில் உச்சபட்சம் என்னவென்றால் தன் கணவரின் லேப்டாப் மற்றும் செல்போனை சோப்பு போட்டு கழுவியுள்ளார்.

இதனை கண்ட அந்த கணவர் அதிச்சியடைந்து மனைவியின் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவுகட்ட மருத்துவமனைக்கும் கூட்டி சென்றுள்ளார். இதனிடையே அந்த பெண்ணின் மாமியார் இறந்த நிலையில் நோய்வாய்ப்பட்ட மாமியார் இறந்த பிறகு, அந்த இடத்தை ஆழமாக சுத்தம் செய்ய விரும்பியதால், அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளை 30 நாட்கள் வீட்டிற்கு வெளியே வைத்திருந்தார்.

கணவரை மட்டுமல்லாமல் தன்னுடைய குழந்தைகளையும் துணி துவைக்குமாறும், காலணிகள் மற்றும் பைகளை தினமும் துவைக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் கடுப்பான அந்த கணவர் வெறுப்படைந்து தன் குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

ஆனால் அவரது மனைவி, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த வழக்கை மகளிர் உதவி மைய போலீசார் கையிலேடுத்துள்ளனர். மேலும் கடந்த நவம்பரில், மூன்று கவுன்சிலிங் அமர்வுகள் நடத்தப்பட்ட நிலையிலும் அந்த பெண்ணின் குணத்தில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

'சுத்தமாக இருப்பது தனது இயல்பு என்றும், இதில் தவறு இல்லை' எனவும் அந்த பெண்மணி கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கணவர் விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

BENGALURU, WIFE, LAPTOP, WATER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்